நாய்க்குட்டியுடன்  நடிகை சமந்தா செல்லச் சண்டை போடும் இன்ஸ்டா வீடியோவுக்கு ஹார்ட்டின்கள் குவிந்து வருகின்றன.


நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். தமிழில் ஹிட் கொடுத்துவந்த சமந்தா தெலுங்கு பிரபலம் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவைக் கரம் பிடித்தார். பொதுவாகவே ஹீரோயின்கள் திருமணத்துக்குப் பின்னர் திரைக்கு முழுக்குப் போடும் சூழலே நிலவுகிறது. ஆனால், சமந்தா அதற்கு விதிவிலக்கு. அவர் திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் படங்கள் முன்பை விட வரவேற்பை அள்ளுகிறது. அவரது நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது. தமிழில் வெளியான சூப்பர் டீலக்ஸ் ஆகட்டும் தெலுங்கில் ஓ பேபி, மனம் போன்ற திரைப்படங்களாக இருக்கட்டும் சமந்தா நடிப்பில் மாஸ் காட்டி வருகிறார்.




நடிகை சமந்தாவுக்கு அதனாலேயே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்ஸ்டாகிராமில் இவரது ஃபாலோயர்கள் லட்சங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.


அத்தனை பேரையும் ஏமாற்றாத சமந்தா அவ்வப்போது புகைப்படங்களையும், புதுப்புது வீடியோக்களையும் பகிர்ந்து குளிர்விப்பார். அவருடைய செல்ல நாய்க்குட்டி ஹேஷ் அக்கினேனியின் புகைப்படங்களும் இடம்பெறுவது உண்டு. அக்கினேனி என்பது நாகர்ஜுனா குடும்பத்தின் பெயர். அந்தப் பெயரை சமந்தா தனது நாய்க்குட்டியின் பெயருடனும் இணைத்துள்ளார். நாகர்ஜூனாவுக்கு சமந்தா மீது அதிருப்தி இருப்பதாகவும், நாக சைதன்யா, சமந்தா பிரியப் போவதுமாக வெளியாகும் தகவல்களை எல்லாம் இஸ்டா ஃபாலோயர்ஸ் கவலையுடன் தான் கடந்து வருகின்றனர். இந்த நாய்க்குட்டியுடனான சண்டை போஸ்ட், சமந்தா ரசிகர்களுக்கு ஓர் ஆறுதல் என்று கூட கூறலாம்.




சமந்தா தனது நாய்க்குட்டியுடன் உரையாடுகிறார். அதில் போலியான கோபக் குரலில், "நான் என்றாவது உனது சாப்பாட்டில் பங்கு கேட்டிருக்கேனா? இல்லாவிட்டால் நீ சாப்பிடும் போது நான் உன்னைத் தொந்தரவு செய்திருக்கிறேன். இப்போது பின்னால் சென்று உன் இடத்தில் அமர்ந்து கொள்" என ஆங்கிலத்தில் கூறுகிறார். அதைக் கேட்ட ஹேஷ் அக்கினேனியும் ஆங்கிலம் புரிந்ததுபோல் அவ்வளவு அழகாக தனது இடத்தில் சென்று அமர்ந்து கொள்கிறது. அப்புறம் என்ன உருகிப் போன சமந்தா சற்றே கொஞ்சலான குரலில் ஓ உனக்கு ஆங்கிலம் நன்றாகப் புரிகிறதா எனக் கேட்டுச் சிரித்துக் கொள்கிறார்.



ஹேஷ் அக்கினேனியின் கண்கள் அத்தனை அழகாகத் தான் இருக்கின்றன. சமந்தாவின் தட்டை அந்த நாய்க்குட்டி ஏக்கத்துடன் பார்க்கும் பார்வை கொள்ளை அழகு. செல்லப் பிராணிகள் உண்மையிலேயே சிறந்த ஸ்ட்ரஸ் பஸ்டர்தன் என்பதற்கு இந்த இஸ்டா வீடியோவும் ஓர் உதாரணம்.


Actor vijay sethupathi | இந்த வாரம்... விஜய் சேதுபதி வாரம்..! இரண்டு நாளில் மூன்று படங்கள் ரிலீஸ்...!