இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை பண்டிகை காலமானது மிகவும் கொண்டாட்டமானது ஆகும். விழா காலங்களில் திரையரங்குகளில் மக்கள் படையெடுப்பார்கள் என்பதால் விசேஷ நாட்களில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை வெளியாவது வழக்கம்.


தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் அதிக படங்கள் வெளியாவது வழக்கம். நடப்பாண்டிற்கான தீபாவளி வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் வெளியாகிறது.


அமரன்:


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகிறது. சாய்பல்லவி நாயகியாக நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார்.


பிரதர்:


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உலா வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரதர். பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தை இயக்கி மிகவும் புகழ்பெற்ற இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். நகைச்சுவையாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு பூமிகா அக்காவாக நடித்துள்ளார். பிரியங்கா மோகன், விடிவி கணேஷ் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.


ப்ளடி பெக்கர்:


 தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் கவின். இவர் நெல்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள சிவபாலன் என்ற இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, விஷவ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளார். கவின் பிச்சைக்காரனாக நடித்துள்ள இந்த படம் தீபாவளி விருந்தாக வரும் 31ம் தேதி ரிலீசாகிறது.


தமிழில் நேரடி படமாக இந்த படங்கள் வெளியாகிறது. இதுதவிர மற்ற மொழிகளிலும் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டும், மற்ற மொழிகளிலும் நேரடியாகவும் சில படங்கள் வெளியாகிறது.


லக்கி பாஸ்கர்:


தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகராக உலா வருபவர் துல்கர் சல்மான். தென்னிந்தியாவில் பிரபலமான நடிகரான இவரது நடிப்பில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் படம் தீபாவளி விருந்தாக வருகிறது. வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார். நேரடி தெலுங்கு படமான இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடத்திலும் வெளியாகிறது. த்ரில்லர் படமாக இந்த படம் வெளியாகிறது.


ஜீப்ரா:


தெலுங்கில் சத்யதேவ், சத்யராஜ், தனஞ்ஜெயா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜீப்ரா. ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படம் தீபாவளி வெளியீடாக வரும் 31ம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. ரவி ப்ஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


பகீரா:


கே.ஜி.எஃப். படத்திற்கு பிறகு கன்னட திரையுலகம் கவனம் பெற்றுள்ளது. கே.ஜி.எஃப். படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் கதையில் சூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பகீரா. கன்னடத்தின் முன்னணி நடிகர் ஸ்ரீமுரளி இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஹோம்பலே ப்லிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.


பூல் பூலையா 3:


இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பூல் பூலையா. நகைச்சுவை த்ரில்லர் பேய் படமான இந்த படத்தின் 3வது பாகம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. நவம்பர் 1ம் தேதி வெளியாகும் இந்த படத்தில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி தீக்‌ஷித் நடித்துள்ளனர். நேரடி இந்திப்படமாக இந்த படம் வெளியாகிறது.


 


தீபாவளி விருந்தாக வெளியாகும் இந்த படத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் படங்கள் அமோக வெற்றி பெறும்.