அந்த நாள்..ஞாபகம்..
முன்னாளில், தீபாவளி என்றாலே பெரும்பாலானோருக்கு ஞாபகம் வருவது பலகாரங்களும் பட்டாசுகளும், புதுத்துணிகளும்தான். காலங்களும், காட்சிகளும் மாற, இவற்றோடு சேர்த்து நாம் இணைத்து கொண்டது தான் சினிமா. தீபாவளியன்று வெளியாகும் படங்கள் மட்டுமன்றி, அந்நாளில் ஒளிபரப்பப்படும் படங்களுக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர்.
செல்போன் யுகம் வருவதற்கு முன்பு, ஞாயிற்றுக் கிழமைகளிலும், பண்டிகை நாட்களிலும் ஒளிபரப்பப்படும் புத்தம் புதிய திரைப்படங்களுக்காக வீட்டில் உள்ள அனைவரும் காத்துக் கொண்டிருப்போம். “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..திரைக்கு வந்து சில மாதங்களே ஆன..புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம்” என்ற கணீர் குரல் சன் டிவியில் ஒளிக்கும் போது பலருக்குள் ஒரு இனம் புரியாத ஆனந்தம் பிறந்து விடும்.
தீபாவளித் திரைப்படங்கள்:
எல்லா வருடமும் போல, இந்த வருட தீபாவளிக்கும் சன் தொலைக் காட்சி மக்களுக்கு பிடித்த, புத்தம் புதிய திரைப்படங்களையும் கொஞ்சம் பழைய திரைப்படங்களையும் ஒளிபரப்பவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வரும் சனிக்கிழமை முதலே ஒளிபரப்பப்படும் படங்களின் லிஸ்டில், அர்ஜூன் நடித்து 2004-ஆம் ஆண்டு வெளிவந்த கிரி முதல், விஜய் நடித்து சமீபத்தில் வசூல் சாதனை படைத்த பீஸ்ட் வரை, அத்தனை ஃபேன் ஃபேவரட் படங்களும் இடம் பெற்றுள்ளன.
சனிக்கிழமை படங்கள்
கிரி-காலை 8:30
அர்ஜூன், ரீமாசென், வடிவேலு, தேவையாணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் ஹிட் அடித்த திரைப்படம் கிரி, சனிக்கிழமை காலை 8:30-ற்கு டெலிகாஸ்ட் ஆகிறது.
சுந்தர பாண்டியன்-மாலை 3:30
சசிகுமார், லக்ஷ்மி மேனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான் இப்படம் சனி அன்று, மாலை 3:30-ற்கு ஒளிபரப்பப்பட இருக்கிறது.
ஞாயிறு சிறப்புப்படங்கள்
ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் படங்களின் பட்டியல்:
தனி ஒருவன்-காலை 9:30
அரவிந்த் சாமி, ஜெயம் ரவி, நயன்தாராவின் நடிப்பில் வெளியான அசத்தல் திரைப்படம் தனி ஒருவன். இப்படம் ஞாயிறு அன்று காலை 9:30-ற்கு சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
நாய் சேகர்-மாலை 3:00
நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் புது முகம் பவித்ரா இனைந்து நடித்த படம் நாய் சேகர். இப்படம் மாலையில் ஒளிபரப்பாகிறது.
விஸ்வாசம்-மாலை 6:30
அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க 2019ஆம் ஆண்டில் வெளியானது விஸ்வாசம் திரைப்படம். தந்தை-மகள் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ஞாயிறு மாலை டெலிகாஸ்ட் ஆகிறது.
கலகலப்பு-இரவு 10:00
சுந்தர் சி இயக்கத்தில் மசாலா ட்ரீட்டாக வெளியாகி ஹிட் அடித்த படம் கலகலப்பு. இப்படம் ஞாயிறு இரவு 10 மணிக்கு ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது.
தீபாவளி (திங்கள்) திரைப்படங்கள்
தீபாவளி தினத்தன்று ஓளிபரப்பப்படும் திரைப்படங்கள்
டாக்டர்-காலை 11:00
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் டாக்டர். இப்படம், திங்களன்று காலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பாரீஸ் ஜெயராஜ்-மாலை 3:00
சந்தானம் நடிப்பில் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் பாரீஸ் ஜெயராஜ். இந்த படம், திங்கள் மாலை ஒளிபரப்பாக இருக்கிறது.
பீஸ்ட்-மாலை 6:30
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பையும் வசூல் சாதனையும் புரிந்த படம் பீஸ்ட். ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பாத்திருந்த இப்படத்தை திங்கள் மாலை 6:30 ஒளிபரப்பு செய்கிறது சன் டிவி.
வின்னர்-இரவு 11:00
சன் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் சலிக்காமல் திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் படங்களுள் வின்னர் படமும் ஒன்று. இப்படம், பீஸ்ட்படத்தையடுத்து, இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
செவ்வாய் திரைப்படங்கள்
தீபாவளிக்கு அடுத்து செவ்வாய்க்கிழமையன்று ஒளிபரப்பாகும் சிறப்பு திரைப்படங்கள்
ஆறு-காலை 8:30
சன் டிவியின் ரிபீட் லிஸ்ட் படங்களும் சூர்யா நடித்துள்ள ஆறு திரைப்படமும் ஒன்று. இப்படம், செவ்வாய் காலை ஒளிபரப்பாகிறது.
டிக் டிக் டிக்-மாலை 3:30
ஜெயம் ரவி நடிப்பில் தமிழின் முதல் விண்வெளி திரைப்படமாக உருவானது டிக் டிக் டிக். இப்படம், செவ்வாய் அன்று மாலை 3:30-க்கு ஒளிபரப்பாகிறது.