இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் ஷாருக்கானுக்கு பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி வித்தியாசமான முறையில் பிறந்த வாழ்த்துகள் கூறியுள்ளார்.

Continues below advertisement

பாலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கானின் 56-வது பிறந்தநாளை உலகம் முழுவதிலும் உள்ள அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி. இவர், பல வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக செயல்பட்டு பல்வேறு ரசிகர்களை சேர்த்துள்ளார். 

 

Continues below advertisement

இவர், தற்போது நடிகர் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இந்த நாளில் எல்லாம் வல்ல கிங் கானின் அமைதி மற்றும் ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன். நான் வேறு எதுவும் சொல்ல முடியாது ஷாருக்கான் ஐயா. இந்த ஆண்டுகளில் நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியையும் கடவுள் உங்களுக்கு வழங்கட்டும்’ என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் ஷாருக்கானுடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். விஜய் டிவி விருது நிகழ்ச்சியின்போது, எடுக்கப்பட்ட வீடியோ அது. அந்த வீடியோவில், அருகில் ஏ.ஆர்.ரஹ்மானும் உள்ளார்.

 

pஇமேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண