தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். சமீப காலமாக இவரின் படங்கள் மிக பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் கமர்ஷியல் படங்களிலும் மசாலா படங்களிலும் நடித்து வந்த விஜய்க்கு ஹீரோ அந்தஸ்து என்பது பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்களுக்கு பிறகே கிடைக்க துவங்கியது. அதை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. அப்படி விஜய் நடிப்பில் வெளியான ஒரு ஹிட் திரைப்படம் தான் 'ஷாஜகான்'. இன்றும் காதலர்களின் ஃபேவரட் திரைப்படமாக ஷாஜஹான் கொண்டாடப்படுகிறது. 



முக்கோண காதல் கதையை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் நடிகர் விஜய் நண்பனாக மலையாள நடிகர் திவாகரன் கிருஷ்ணா நடித்திருந்தார். இறுதியில் படத்தின் ஹீரோயின் ரிச்சா பலோட், திவாகரனை தான் விரும்புகிறார் என தெரிந்ததும் தன்னுடைய காதலை  வெளிப்படுத்தாமலேயே இருவரையும் சேர்த்து வைத்து விடுவார் விஜய். அப்படம் முழுக்க விஜய்யுடன் ட்ராவல் செய்தவர் நடிகர் திவாகரன் கிருஷ்ணா. 


சமீபத்தில் அவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோது விஜய்யை  சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது அவர் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனவேதனையுடன் பகிர்ந்து இருந்தார் நடிகர் திவாகரன் கிருஷ்ணா. 



சென்னையில் ஒரு மலையாள படத்தின் ஷூட்டிங்கிற்காக வந்து இருந்தேன். விஜய் சார் நம்பர் என்னிடம் இருந்தது. அதற்கு நான் பல தடவை போன் செய்து பார்த்தேன் ஆனால் எடுக்கவே இல்லை. அப்போ தான் என்னுடைய மேனேஜர் அவருடைய மேனேஜர் நம்பரை கொடுத்தார். நான் அவருக்கு பல முறை போன் செய்து பார்த்தேன். வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கூட அனுப்பினேன் ஆனால் பதிலே இல்லை. ஒரு முறை அவர் போனை எடுத்தபோது நான் நடிகர் கிருஷ்ணா பேசுகிறேன். விஜய் சார் கூட ஷாஜஹான் படத்தில் நடிச்சு இருந்தேன். ரொம்ப நாளாயிடுச்சு நான் விஜய் சார் கூட ஒரு 5 நிமிஷம் பேசணும்னு சொன்னேன். அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? அவர் இப்போ பழைய விஜய் எல்லாம் கிடையாது. அவர் இப்போ பெரிய லெவலில் இருக்கிறார். அவரை பார்ப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம் சார் அப்படினு விஜய் சார் மேனேஜர் சொல்லிட்டார். 


அது எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. நான் அவர் கிட்ட காசு கேட்கப்போறது கிடையாது. நான் வெளி ஆள் கூட இல்ல. நான் அவர் கூட நடிச்சவன் அவரை பார்த்து பழைய மெமரிஸ் ஷேர் பண்ணிக்கணும். அவரை கட்டி பிடிச்சு வாழ்த்து சொல்லணும்ன்னு தான் நினச்சேன். அவரோட நடிச்சது என்னோட வாழ்க்கையில எவ்வளவு பெரிய மரியாதை கிடைச்சுது. அதை ஷேர் பண்ணிக்கனும்னு தான் நினைச்சேன். ஆனா விஜய் சார் மேனேஜர் அப்படி பேசினது எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு" என்றார் நடிகர் திவாகரன் கிருஷ்ணா.