நாள்: 10.02.2024 - சனிக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம்:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமை வெளிப்படும். வரவு நிறைந்த நாள்.
ரிஷபம்
வெளிவட்டார பழக்கவழக்கங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தொழிலில் புதிய மாற்றம் பிறக்கும். புகழ் நிறைந்த நாள்.
மிதுனம்
ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். சபை தலைவராக இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
கடகம்
வாழ்க்கைத் துணைவரின் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
சிம்மம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் முதலீடு மேம்படும். சலனம் நிறைந்த நாள்.
கன்னி
கனிவான பேச்சுக்களால் மதிப்பு மேம்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
துலாம்
வாகன வசதிகள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொன், பொருட்சேர்க்கை சார்ந்த சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் நிதானத்தோடு செயல்படவும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு
குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடிவரும். அலுவலகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். வலிமை மேம்படும் நாள்.
மகரம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அணுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வசதி நிறைந்த நாள்.
கும்பம்
முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். உதவி செய்வோரின் சுயரூபங்களை அறிவீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். திடீர் பயணங்களால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமான முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். நேர்மை வெளிப்படும் நாள்.