ஆர்யாவிற்கு பதிலாக பெரிய ஹீரோவை வைத்து  படம் எடுக்கச் சொன்ன தயாரிப்பாளரின் முடிவை இயக்குநர் விஷ்ணு வர்தன் ஏன் மறுத்தார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.  


இது குறித்து Behindwoods யூடியூப் சேனல் குறித்து பேட்டியளித்துள்ள இயக்குநர் விஷ்ணுவர்தன், “அறிந்தும் அறியாமலும் படத்திற்கு பின்னர் அந்தப் படத்தை தயாரித்த அதே நிறுவனத்துடன் பணிபுரிய முடிவெடுத்தேன். அந்தப்படத்தில் ஆர்யா மற்றும் பரத்தை நான் கமிட் செய்திருந்தேன்.


அப்போது ஒரு தயாரிப்பாளர் ஒரு பெரிய ஸ்டாரை வைத்து, இந்தப் படத்தை இயக்குங்கள் என்றார். அதற்கு சம்பளமாக எனக்கு, நான் அப்போது வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை விட 50 மடங்கு அதிகமாக தருவதாக கூறினர். அந்த சம்பளத்தை எனது வாழ்வில் பல வருடங்களுக்கு பிறகே நான் பார்த்தேன். 




அந்த ஆஃபர் மிகப் பெரியதாக இருந்த போதும் நான் அதை ஒத்துக்கொள்ள வில்லை. அதை ஆஃபரை மட்டும் நான் ஏற்றுக்கொண்டிருந்தால் பின்னாளில் மிகப் பெரிய துரோகமாக மாறியிருக்கும். அதே போன்ற தவறை என் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். காரணம் நான் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். பணத்துக்காக நான் ஒருவரின் கனவை சிதைக்கக்கூடாது அல்லவா” என்றார்  




பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குநர் விஷ்ணு வர்தன் அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து  தொடர்ந்து ஆர்யா, பரத் நடித்த பட்டியல், அஜித் நடித்த பில்லா, ஆரம்பம், யட்சன் உள்ளிட்டப் படங்களை இயக்கினார். அண்மையில் ஹிந்தியில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற ஷேர்ஷா படத்தை இயக்கினார். 


 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்