தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகினர் பலர் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ பார்போரை மனமுருக வைத்துள்ளது. சினிமாவில் வாய்ப்பு தேடி வந்து சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வந்த தனக்கு ஆர்.பி செள்த்ரி வாய்ப்பளித்தது குறித்து அவர் இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக திரைப்பட தயரிப்பில் இருந்து வந்தவர் ஆர்.பி செளத்ரி. 1990 ஆம் ஆண்டு தமிழில் வெளியான புது வசந்தம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக , சூர்யவம்சம் , உன்னிடத்தில் என்னை கண்டேன் ஆகிய பல்வேறு ஹிட் படங்களை ஆர் பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விக்ரமன் மற்றும் ஆர்.பி செளத்ரி இடையே பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு இருந்து வந்தது. அவரது இறப்பு இயக்குநர் விக்ரமனை பெரியளவில் பாதித்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர் பி செளத்ரி குறித்து விக்ரமன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பேசப் பேச அவர் வேதனையில் அழுதுள்ளது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.
நிறைவேறாமல் போன ஆர் பி செளத்ரியின் ஆசை
இயக்குநர் விக்ரமன் வெளியிட்டுள்ள வீடியோவில் " 40 வருடத்திற்கு முன்னாடி சினிமாவில் நாமும் ஒரு இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வந்தேன் . பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி பின் துணை இயக்குநராக வளர்ந்து முதல் படம் பண்ண பல்வேறு கம்பேனிகளுக்கு ஏறி இறங்கி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது தான் செளத்ரி சார்கிட்ட போய் ஒரு கதை சொன்னேன். அவர் என் கதையை கேட்ட உடனேயே ஓக்கே சொன்ன படம்தான் புது வசந்தம். இன்னைக்கு என் வீட்டின் பெயயே புது வசந்தம் தான். இன்னைக்கு நான் நிம்மதியாக சாப்பிடுகிறேன் என்றால் அது அவர் போட்ட பிச்சை. அவர் இன்னைக்கு இல்ல. எனக்கு ரொம்ப கவலையான விஷயம் 100 படம் தயாரிக்க வேண்டும் என்கிற அவரது ஆசையை பார்க்க அவர் இல்லாமல் போனது தான். " என விக்ரம் இந்த வீடியோவில் அழுதபடியே பேசியுள்ளார்.
ஜெய்பூரில் காரில் சென்றபோது லாரியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஆர்.பி செள்த்ரி படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரரிந்தார்.
