கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்தும், 40°C-க்கும் அதிகமான வெப்பநிலையில் இருந்தும் தப்பிக்க குளிர்சாதன பெட்டி (AC) இன்று ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இருப்பினும், ஏசியை வெறும் ஆன் செய்வதால் மட்டும் ஒருவருக்குத் தேவையான நிம்மதியான உறக்கம் கிடைத்துவிடாது.

Continues below advertisement

சரியான முறையில் ஏசி அமைப்புகளை (Settings) கையாளுவதன் மூலம் உடல் ஆரோக்கியம், ஆழ்ந்த உறக்கம் மற்றும் மின் சேமிப்பு ஆகிய மூன்றையும் சமநிலையில் பராமரிக்க முடியும். கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியுடன் விழித்தெழ நீங்கள் பின்பற்ற வேண்டியவைகளை கீழே கானாலாம்

சரியான செட்டிங்ஸ் முக்கியம்:

தவறான ஏசி அமைப்புகள் உங்கள் அறையை அதிகப்படியான குளிராகவோ அல்லது வறண்டதாகவோ மாற்றிவிடும். இது உங்கள் தூக்கத்தின் தரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், வறண்ட சருமம், தொண்டை வலி மற்றும் சீரற்ற தூக்க சுழற்சி போன்ற உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, உங்கள் உடலின் இயற்கையான ஓய்வு நிலைக்கு ஏற்ப ஏசியை அமைப்பதே ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

Continues below advertisement

ஏசி ஸ்லீப் மோடு  என்றால் என்ன?

நவீன ஏசிகளில் 'ஸ்லீப் மோடு' என்ற சிறப்பம்சம் உள்ளது, ஆனால் பலருக்கு அதன் பயன் தெரிவதில்லை. இந்த வசதியைத் தேர்வு செய்யும்போது, இரவு நேரத்தில் உங்கள் அறையின் வெப்பநிலையையும் மின்விசிறியின் வேகத்தையும் ஏசி தானாகவே படிப்படியாக மாற்றியமைக்கும். இது அதிகப்படியான குளிர்ச்சியைத் தடுப்பதுடன் மின்சாரத்தையும் மிச்சப்படுத்துகிறது. குறிப்பாக, இரவில் வெளிப்புற வெப்பநிலை குறையும் போது ஏசி தொடர்ந்து முழு வேகத்தில் இயங்குவதைத் தவிர்த்து உங்களுக்கு இதமான சூழலை இது வழங்குகிறது.

சரியான வெப்பநிலையைத் தீர்மானித்தல்

நிபுணர்களின் கருத்துப்படி, தூங்குவதற்கு ஏற்ற ஏசி வெப்பநிலை 24°C முதல் 26°C வரை ஆகும். இந்த வெப்பநிலையானது காற்றை அதிகப்படியாக வறட்சியடையச் செய்யாமல், உங்கள் உடல் சீக்கிரம் உறக்க நிலைக்குச் செல்ல உதவுகிறது. உங்கள் ஏசியில் உள்ள AI மோடு அல்லது புரோகிராம் வசதிகளைப் பயன்படுத்தி இரவு முழுவதும் இதே வெப்பநிலையைத் தொடர்ந்து பராமரிக்கலாம்.

டைமர் மற்றும் ஷெட்யூலிங் வசதி

ஏசியில் உள்ள டைமர் அல்லது மொபைல் ஆப் வசதியைப் பயன்படுத்தி அது தானாகவே ஆஃப் ஆகும் நேரத்தை நீங்கள் முன்கூட்டியே முடிவு செய்யலாம். இதன் மூலம் தேவையற்ற நேரங்களில் ஏசி ஓடுவதைத் தவிர்த்து மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். அதே நேரத்தில் உங்கள் அறையின் வெப்பநிலையும் சீராக இருப்பதை இது உறுதி செய்கிறது.

ஈரப்பதத்தைக் குறைக்க டிரை மோடு

அதிகப்படியான ஈரப்பதம் உள்ள இடங்களிலோ அல்லது மழைக்காலங்களிலோ 'டிரை மோடு' பயன்படுத்துவது சிறந்தது. இது அறையில் உள்ள பிசுபிசுப்பான தன்மையை நீக்கி, காற்றை லேசாக்குவதன் மூலம் உங்களுக்கு ஒரு நிம்மதியான உறக்கத்தை வழங்குகிறது.

காற்றோட்டத்தின் திசை மற்றும் வேகம்

இரவு நேரங்களில் மின்விசிறியின் வேகத்தைக் குறைத்து வைப்பது அமைதியான சூழலை உருவாக்கும். ஏசியின் காற்று உங்கள் உடலின் மீது நேரடியாகப் படாதவாறு அதன் லூவர்களை (Louvres) மேல்நோக்கியோ அல்லது படுக்கைக்கு அப்பாலோ திருப்பி வைப்பது சிறந்தது. இது நேரடி குளிர் காற்றினால் ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்த்து உங்கள் கோடைக்கால உறக்கத்தை மேம்படுத்தும்.