விஜய் மில்டன் இயக்கியுள்ள மழை பிடிக்காத மனிதன்
கோலிசோடா , பத்து என்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய இயக்குநர் விஜய் மில்டன் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
10 எண்றதுக்குள்ள விஜய் நடிக்க வேண்டிய படம்
விஜயின் ஆரம்ப கால படங்களில் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைபட்டு தான் திரைப்பட கல்லூரியில் சேர்ந்ததாக விஜய் ஆண்டனி முன்பொரு முறை தெரிவித்துள்ளார்.
பிரியமுடன் படத்தின் படப்பிடிப்பின் போதே போதே விஜய்யிடம் தோழன் என்கிற படத்தின் கதையை சொன்னதாகவும் கதையை கேட்டுவிட்டு முதல் பாகம் சிறப்பாக இருப்பதாகவும் இரண்டாவது பாகம் கொஞ்சம் சரியில்லை அதை முழுவதும் எழுதிவிட்டு வரும்படி விஜய் சொன்னதாக விஜய் மில்டன் தெரிவித்தார்.
மேலும் பிரியமுடன் படத்தின் 100 வது நாள் விழாவில், விஜய் மில்டனை மேடைக்கு அழைத்து விஜய் கவுரவப் படுத்தினார். அதன் பின்னர் ஒரு கேப் விழுந்தது. அதன் சேரன் தயாரித்த அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை விஜய் மில்டன் இயக்கினார். இந்தப் படத்தை விஜய் தனது மனைவியுடன் சேர்ந்து பார்த்து தன்னை பாராட்டியதாக விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.
"ஏதாவது கதை வச்சிருக்கீங்களா என்று விஜய் கேட்டபோது தான் நான் அவரிடம் பத்து எண்றதுக்குள்ள கதையைச் சொன்னேன். கதை அவருக்கு பிடித்திருந்தது. எனக்கு செம்ம சந்தோஷம். முதலில் படத்தை லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தது. பின் பிரகாஷ் ராஜ் கதையை கேட்டுவிட்டு அவரே விஜய்யிடம் சென்று நான் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். அப்போதுதான் ஏவிஎம் சரவணன் விஜய்யை வைத்து வேட்டைக்காரன் தயாரிக்க தொடங்கினார்.
இப்படியே நான் விஜய்யை வைத்து படம் செய்வது பல காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. 5 வருஷமா டேக் ஆஃப் ஆகவே இல்லை. அதற்கிடையே அயன் படம் வந்தது. அதில் நான் யோசிச்சிருந்த நிறைய சீன் வந்திடுச்சி. எனக்கு ரொம்பவே அப்செட்டாகிவிட்டது. அப்போதுதான் நான் கோலி சோடா பண்ணேன். அது செம்ம ஹிட். விஜய்க்கு அப்போ கத்தி சூட் நடக்குது. அப்போ விஜய் என்னைப் பார்த்து கோலி சோடா படத்தைப் பாராட்டினார். அப்போது நான் அவரிடம் பத்து எண்றதுக்குள்ள படத்தை விக்ரமை வைத்து பண்ணுவதாக சொன்னேன். உடனே விஜய் அது என் கிட்ட சொன்ன கதை தானே சூப்பரா பண்ணுங்க அண்ணா என்றார். அதுதான் நான் விஜய்யை நேரடியாக கடைசியாக சந்தித்த தருணம்” இவ்வாறு விஜய் மில்டன் கூறினார்.