தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர்கள் பட்டியலில் இருப்பவர் நடிகர் விக்னேஷ் சிவன். போடா போடி, தானா சேர்ந்த கூட்டம் , நானும் ரௌடிதான் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். மேலும் வேலையில்லா பட்டதாரி போன்ற சில படங்கள் மூலமாக திரையிலும் தோன்றியுள்ளார் விக்னேஷ் சிவன். நானும் ரௌடிதான் படத்தின் ஷூட்டிங் நாட்களில்தான், அந்த படத்தின் நாயகி நயந்தாராவுடன் இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கொண்டாட்டங்கள் மற்றும் ஸ்பெஷல் நாட்களில் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதும் வழக்கம். சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருப்பவர் விக்னேஷ் சிவன். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் அம்மா,மீனா குமாரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார் . அதில் “ எனது தெய்வத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், உலகில் சிறந்த அனைத்தையும் உங்களுக்கு கொடுத்து கடவுள் உங்களை ஆசிர்வதித்துள்ளார், சிறந்தவைகள் எல்லாவற்றிலும் இனிமையான தருணங்கள்தான் எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவை, ஹாப்பி பர்த்டே மி என் முகவரி நீயே ! தாயே” என அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கே கியூட்டாக இருக்கிறது அந்த வீடியோ.
இது தவிர விக்னேஷ் சிவன் அம்மா நடமாடிய வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு கீழே கமெண்டில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, விஜ்ய சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த படத்தில் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு சொந்தமான ரௌடி தயாரிப்பு நிறுவனம் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு முழு மூச்சில் இருவரும் கெரியரில் தீவிரம் காட்டி வருகின்றனர். முன்னதாக திருமணத்திற்கான செலவு தொகை அதிமாகும் என்பதால் அதற்கான பணத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறோம் என விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். ஒரு வேளை இந்த கப்புள்ஸ் படம் போலவே திருமணத்தையும் அதிக பட்ஜெட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார்களோ என்னவோ என கிசுகிசுக்கப்படுகிறது. முன்னதாக “தங்கமே உன்னைத்தான் “ என்ற பாடலை நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். அந்த பாடல்தான் நயந்தாராவிற்கு மிகவும் பிடித்த பரிசாம்.