வாடிவாசல்


அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்குவதாக அறிவித்தார். சூர்யா இப்படத்தில் நடிப்பதாக 2021 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. சி.சு செல்லப்பா எழுதிய நாவலை மையப்படுத்தி இப்படத்தை இயக்க இருந்தார் வெற்றிமாறன்.  ஜல்லிகட்டை மையப்படுத்திய படம் என்பதால் இப்படத்திற்கு நிறைய முன்னேற்பாடுகள் தேவையாக இருந்தன. முதலில் முழுக்க முழுக்க நிஜ ஜல்லிகட்டு களத்தில் இப்படத்தை வெற்றிமாறன் எடுக்க நினைத்தார். பின் அதன் ஆபத்துகளை உணர்ந்து பகுதி லைவாகவும் மீதியை சி.ஜியில் எடுக்க முடிவுக்கு வந்தார். வாடிவாசல் படத்திற்கு என்றே தனியாக அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் காளை ஒன்றையும் படக்குழு தயார் செய்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யா இப்படத்திற்காக தனியாக காளை ஒன்றையும் வளர்த்து அதனுடன் பயிற்சி எடுத்து வந்தார். 


4 ஆண்டுகளாக காத்திருக்கும் ரசிகர்கள்


வாடிவாசல் படம் அறிவித்து 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. வெற்றிமாறன் விடுதலை 2 பாகங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படம் கிடப்பில் இருந்து வந்தது. விடுதலை 2 ஆம் பாகம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வாடிவாசல் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் கலைப்புலி தானு. மேலும் பல்வேறு நேர்காணல்களில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கலைப்புலி தெரிவித்தார் 


அதேபோல் படத்தின் இசை வேலைகளும் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆனால் படம் குறித்து இதுவரை வெற்றிமாறன் எதுவும் கூறாமல் இருந்து வந்த நிலையில் அவர் வேறு பிளான் ஏதாவது வைத்திருப்பாரோ என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. தற்போது வாடிவாசல் படத்தின் உறுதியான அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன்.


வாடிவாசல் படப்பிடிப்பு தொடக்கம்






கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வரும் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கும் என்று தற்போது படத்தின் திரைக்கதை பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஒருவழியாக வெற்றிமாறன் தன் வாயில் சொன்னாரே என  சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.