Actor Simbu: நடிகர் சிம்புவிற்காக தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் வெற்றிமாறன் தூது போன தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்புவிற்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையேயான பிரச்சனை கோலிவுட் வட்டாரம் அறிந்ததே. அதாவது தங்கள் படதயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து கொடுப்பதாக ஐசரி கணேஷுக்கு சிம்பு கால் ஷீட் கொடுத்து விட்டு பின்னர் நடிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்பட்டது. இச்சூழலில் தான் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் புயலை கிளப்பிய நிலையில் பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. இதனிடையே, கண்டிப்பாக சிம்பு கண்டிப்பாக உங்களுக்கு நான் கால் ஷீட் தருகிறேன் என்று மீண்டும் உறுதியாகச் சொன்னதாகவும் இதனை நம்பி ஐசரி கணேஷ் வழக்கை வாபஸ் பெற்றதாகவும் கூறப்பட்டது.
தூது போன வெற்றிமாறன் :
ஆனால், தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி வரும் அரசன் என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இச்சூழலில் தான் தனக்கு படம் நடித்து கொடுக்காமல் இருக்கும் சிம்புவிற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான வேலையில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அரசன் படக்குழு உடனடியாக ஐசரி கணேஷை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.
அதாவது இது சிம்புவை மட்டும் பாதிக்காது எங்களுக்கும் தான் பிரச்சனை எப்படியாவது சிம்புவை உங்களுக்கு படம் நடிக்க வைக்கிறோம் என்று பேசியதாகவும் ஆனால் ஐசரி கணேஷ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதாவது தன்னை நம்ப வைத்து சிம்பு ஏமாற்றி விட்டதாக சொல்லியிருக்கிறாராம். அப்படி இருக்கையில் வேறு படங்கள் நடிப்பதற்கு மட்டும் அவருக்கு நேரம் இருக்கிறது சொன்ன சொல்லை காப்பாற்றாமல் இப்படி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கடுகடுத்திருக்கிறார் ஐசரி கணேஷ்.
இதனிடையே தொடர்ந்து வெற்றிமாறன் சிம்புவிற்காக ஐசரி கணேஷிடம் தூது போன வண்ணம் இருப்பதாக சொல்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில். மறுபுறம் இந்த பிரச்சனை சரி செய்யப்படவில்லை என்றால் அது அரசன் திரைப்படம் வெளியாகும் போது கண்டிப்பாக பிரச்சனையாக மாறும் இதை இப்போது எப்படியாவது முடித்துவிடுங்கள் என்று சிம்பு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.