தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனுஷ். தேசிய விருது பெற்ற நடிகரான அவருக்கென்று தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், பிரபல இயக்குனரான வெற்றிமாறனின் ஆஸ்தான நாயகனாக தனுஷ் உள்ளார். அவரது முதல்படமான பொல்லாதவன் தொடங்கி விசாரணை தவிர அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் தனுஷ்தான் நாயகன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய நான்கு படங்களுமே மெகாஹிட் படங்கள்.


வெற்றிமாறன் –தனுஷ் கூட்டணியில் உருவாகிய வடசென்னை மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வெற்றிமாறன் வடசென்னை படத்தின் நாயகனாக முதலில் சிம்புவைத்தான் தேர்வு செய்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க இயலாமல் போய்விட்டது.




இந்த நிலையில், வெற்றிமாறன் தனியார் யூடியூப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,


“ ஒரு இயக்குனராக தனுஷிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், நீங்க என்ன சூழ்நிலையை கொடுத்தாலும் அதை அவரால் நிறைவேற்ற முடியும். அந்தந்த காலகட்டத்திற்கு அந்தந்த வயதுக்கேற்ப அவர் அதை வெளிப்படுத்துவார். முதிர்ச்சி வர,வர அனுபவம் வர, வர அவர் அதற்கேற்ப நடிக்கிறார்.


ஜெயில் காட்சிகள் ஒரு 30, 40 நாட்கள் படம்பிடித்தோம். அதில் அவர் ஒரு நான்கு நாட்கள் மட்டுமே வசனம் பேசினார். மற்ற நாட்கள் முழுவதும் அவர் அங்குமிங்கும் நடந்தார். மற்ற நடிகர்கள் இதைச் செய்திருப்பார்களா? என்றால் தெரியாது. இப்படி 100 சதவீதம் நம்பிக்கையுடன் செய்பவர்தான் தனுஷ். படப்பிடிப்பு தள்ளிச்சென்றதால் தாடி வளர்ந்ததுடன் தனுஷ் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தில் இதுதான் வடசென்னை லுக் என்று வைரலாகியது. இதனால், அதையே வடசென்னையில் 30 வயது மதிக்கத்தக்க தனுஷின் தோற்றமாக மாற்றினேன்.




ஜி.வி.யின் ஸ்டூடியோவில் காளை மற்றும் பொல்லாதவன் படத்தின் வேலைகள் போய்க்கொண்டிருந்தது. அப்போதே படம் பண்ணனும், படம் பண்ணனும்னு பேசிக்கொண்டிருந்தோம். அப்போது. கிளவுட்நைன் உடனடியாக படம் செய்ய வேண்டும் என்றார்கள். பின்னர், அவர்களால் படம் பண்ண முடியாமல் போனது. மற்றபடி எதுவும் இல்லை.


தனுஷிடம் போன் செய்து சிம்பு நடிப்பதாக கேட்ட ரோலையே நாங்கள் மாற்றிவிட்டோம். அதை மாற்றி எழுதி அந்த கதாபாத்திரத்தை சிறிதாக்கிவிட்டோம். அந்த சின்ன கதாபாத்திரத்தை சிம்பு பண்ண முடியாது. தனுஷ் – சிம்புவும் நல்ல நண்பர்கள். இணைந்து நடிப்பது பற்றி அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இவர்கள் இருவருமே இயக்குனர்கள். நான் ஜி.வி.யுடன்தான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வேறு ஒருவர் இசையமைப்பாளர் என்றால் அது சந்தோஷ் நாராயணன்தான்.”


இவ்வாறு அவர் கூறினார்.


இந்த படத்திற்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தனுஷின் கேரியரில் அந்த படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண