வெற்றிமாறன்


தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கிய விடுதலை 2 திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். இதனிடையில் தனது மனைவியின் 50 ஆவது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார் வெற்றிமாறன். இந்த நிகழ்ச்சியில் பாடகர் சைந்தவி , மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். 


வெற்றிமாறன் ஆர்த்தி


வெற்றிமாறன் விகடனில் எழுதிய மைல்ஸ் டூ கோ தொடரில் தனது மனைவியை சந்தித்த தருணம் பற்றி எழுதியிருக்கிறார். இருவரும் முதல் முறை முத்தம் கொடுக்கும்போது போலீஸ் வந்தது , வெற்றிமாறனுக்கு ஆர்த்தி தனது முதல் மாத சம்பளத்தில் பைக் வாங்கிக் கொடுத்தது என இருவருக்கும் இடையிலான நிகழ்வுகளை சுவாரஸ்யமாக விவரித்திருப்பார். தனக்கு கிடைத்த எல்லா மேடைகளிலும் தனது மனைவியைப் பற்றி வெற்றிமாறன் பாராட்டி பேசியிருப்பார். இவர்களுக்கு பூந்தென்றல் என்கிற மகளும் கதிரவன் என்கிற மகனும் உள்ளார்கள். 


தனது மனைவி ஆர்த்தியின் 50 ஆவது பிறந்தநாளை வெற்றிமாறன் சிறப்பாக ஒருங்கிணைத்து கொண்டாடினார். இந்த நிகழ்வில் ஆர்த்தி தாமரை பூவுக்கும் பாடலுக்கு தனது டான்ஸ் மாஸ்டருடன் நடனமாடினார். ஆர்த்தி ஆடியதைப் பார்த்து வெற்றிமாறன் கைதட்டி ரசித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


ஆர்த்தி இன்ஸ்டாகிராம் பதிவு






இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஆர்த்தி " நிறைய பெண்கள் 40 அல்லது 50 வயதில் தான் தங்களை மறுபடியும் புதிதாக கண்டடைகிறார்கள். இந்த புது ஜெனரேஷனில் என் மனதிற்கு பிடித்த சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள தூண்டுகிறது. உங்களிடம் கொஞ்சமே மிச்சமிருக்கிறது அதில் முடிந்த அளவிற்கு ஹேவ் ஃபன்" என அவர் பதிவிட்டுள்ளார்