தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோக்கள், பிரபலமான சகோதரர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அவரவரின் தனித்துவமான ஸ்டைல் காரணமாக ஏராளமான ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருப்பவர்கள். திரைக்கு பின்னால் இருவரும் மிகவும் உணர்ச்சிகரமான உறவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள்.
சண்டைக்கார அண்ணன் :
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது நடிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யாவை பற்றியும் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அழகான உறவு குறித்து பகிர்ந்துள்ளார். எங்கள் இருவரும் இரண்டு வயது வித்தியாசம் தான். நான் மேல் படிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னர் வரையிலும் இருவருக்கும் இடையில் ஏராளமான சண்டைகள் நடைபெறும். மிகவும் மோசமாக தரையில் உருண்டு சண்டை போடுவோம். கார், சட்டை இவைகளுக்கு கூட மிகவும் மோசமாக சண்டையிட்ட நாட்கள் உண்டு. எப்போது எதற்காக எங்கள் வீட்டில் பட்டாசு வெடிக்கும் என்றே தெரியாது. ஆனால் இது அனைத்தும் நான் அமெரிக்கா செல்லும் வரை தான். அதற்கு பிறகு அவனுக்கு சண்டையிட ஆள் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களானோம். நண்பர்களை போல அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். அதற்கு பிறகு சூர்யா என்னுடைய அப்பா போல் ஆகிவிட்டார். ஒரு நடிகராக அவர் சந்தித்த எந்த ஒரு பிரச்சினையும் எனக்கு நேராமல் கவனிப்பாக பார்த்துக்கொண்டார்.
எனது முன்னேற்றத்தில் அண்ணனின் பங்கு :
எங்களின் அப்பா ஒரு நடிகராக இருப்பினும் எங்களின் தொழில் சார்ந்த விஷயங்களில் தலையிட மாட்டார். அதனால் என்னுடைய முதல் படம் தொடங்கி எனக்கான அத்தனை விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து பார்த்து பார்த்து செய்தார் சூர்யா. அதற்கு பிறகு எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு சண்டையில் இருந்து அன்பாக மாறியது. மிகவும் பொறுப்பான எனது அண்ணனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். அவருக்கு மிக பெரிய மனது உள்ளது. எப்போதுமே என்னை "நீ வளர்ந்து கொண்டே இரு" என்பார். இப்படி தனது சண்டைக்கார அண்ணன் எப்படி பாசமான குட்டி அப்பாவாக மாறினார் என்ற கதையை ஸ்வாரஸ்யமாக பகிர்ந்தார் நடிகர் கார்த்தி.
தற்போது வந்தியத்தேவனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆவலுடன் நம்மை போலவே காத்திருக்கிறார். படத்தின் விளம்பர பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். உலகளவில் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 30ம் வெளியாகவுள்ளது.