இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. டைம்-லூப் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதையில் மாநாடு உருவாகியிருந்தது. இந்த படம் வெற்றி பெற்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு இதுபோன்ற திரைக்கதை புதிய அனுபவத்தை அளித்திருந்தது.




இந்த நிலையில், பிரேம்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் மாநாடு படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், அந்த ரசிகர் “படம் புரியவில்லை. காட்சிகள் மீண்டும், மீண்டும் வந்துகொண்டே இருக்கிறது. தலைவலி  வந்துவிட்டது”  என்று பேசுகிறார். இந்த வீடியோவை பதிவிட்ட பிரேம்ஜி அதை தனது அண்ணனும், இயக்குனருமான வெங்கட்பிரபுவிற்கும் டேக் செய்துள்ளார்.






இதைப்பார்த்த வெங்கட்பிரபு, “ அனைத்து விமர்சனங்களையும் நாம் சரியான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்லதோ, கெட்டதோ நாம் பார்க்காத விமர்சனமா? அடுத்த படம் இவருக்கு புரியுற மாதிரி, புடிக்குற மாதிரி முயற்சி செய்வோம்.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






வெங்கட்பிரபு மாநாடு படத்தின் டைம் லூப் திரைக்கதையை சலிப்பு தட்டாதபடி நகர்த்தியிருப்பார். அதுதான் அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. மேலும், படத்தில் சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் போட்டி போட்டு நடிப்பில் மிரட்டியிருப்பார்கள். இதுவும் ரசிகர்கள் படத்தை கொண்டாட ஒரு காரணமாக அமைந்தது.




வெங்கட்பிரபு தற்போது அசோக்செல்வன் நடிப்பில் மன்மதலீலை என்ற படத்தை இயக்குவதாக நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் முதன்முறையாக யுவன்சங்கர்ராஜாவுடனான கூட்டணியை வெங்கட்பிரவு முறித்துக்கொண்டுள்ளார். இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். படத்தில் நாயகியாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ் ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண