தி கோட் ட்ரெய்லர் லாஞ்ச்
வெங்கட் பிரபு இயக்கியுள்ள விஜயின் தி கோட் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகியது. கால நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள் என்றாலும் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். படம் குறித்தும் விஜயின் அரசியல் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தார்கள். முக்கியமாக இப்படத்தில் டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜயின் மகன் கதாபாத்திரத்திற்கு நிறைய விமர்சனங்கள் எழுந்தது குறித்து இந்த சந்திப்பில் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியபோது..
விஜய் முகத்தில் கையை வைப்பது அவ்வளவு ஈஸி இல்ல
"விஜய் சார் முகத்தில் கை வைப்பது என்பது அவ்வளவு இஸியான வேலை கிடையாது. அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக டீஏஜிங் தொழில் நுட்பத்தில் தலை சிறந்த கம்பெனியான லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தோம். சமீபத்தில் வெளியான டெட்பூல் படத்திற்கும் அதே நிறுவனம்தான் வி.எஃப்.எக்ஸ் செய்துள்ளது.
இந்த படத்தில் நாங்கள் 3D யில் டபுள் ஆக்ஷன் செய்து அதில் டீ ஏஜிங் செய்திருக்கிறோம். அது ரொம்பவும் கஷ்டமான ஒன்று. அதில் எந்த வித குறையும் இல்லாமல் நாங்கள் செய்ய நினைத்தோம்.
அதற்கான தொழில்நுட்பம் இன்னும் இங்கே வராததால் வெளிநாட்டு நிறுவனத்தை அனுகினோம்" என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.
கேவலமா திட்டுனாங்க..
"விஜயை 23 வயசு பையனாக தான் நான் காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டேன். விஜய் சாரும் முடிந்த அளவிற்கு தன்னை மாதிரியே அது தன்னைபோல் இல்லாமல் ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். விஜய் சாருடைய முகம் ரொம்ப பழக்கப்பட்ட ஒரு முகம். அதனால் மாற்றத்தை உடனே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பத்தில் நாங்கள் டீஏஜிங் செய்தபோது விஜயின் சாரின் தாடைப்பகுதி ரொம்ப ஓட்டியிருந்தது. ஸ்பார்க் பாடலில் கூட அப்படி இருந்தது. அதற்கு பின் தான் நம்ம ரொம்ப எக்ஸ்பெரிமெண்ட் பண்ணக்கூடாது. ஓரளவிற்கு விஜயை இளமையாக காட்டினால் போதும் என்று மறுபடியும் வேலை செய்தோம். இது எங்களுக்கே ஒரு பெரிய பாடம்தான். அதனால்தான் இந்த ட்ரெய்லரை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
முதல் முதலாக விஜய் ஷேவ் பண்ணிட்டு வந்தபோது என்னை கேவலமா திட்டுனாங்க. இப்போ எல்லாருக்கும் அது பிடிச்சிருக்கு. அதேமாதிரி படத்திலும் பார்க்க பார்க்க உங்களுக்கு பிடிக்கும்” என்று வெங்கட் பிரபு பதிலளித்தார்