நடிகர் வைபவ்வின் 25-வது படமான ’ரணம்’ வெளியாகியுள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் வைபவை பாராட்டியுள்ளார்.
சென்னை 28, மங்காத்தா, ஆம்பள, அரண்மனை 2, லாக் அப், மேயாத மான், மலேசியா டூ அம்னீசியா, ஆலம்பனா, பஃபூன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'ரணம்' திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. வைபவ்வின் 25-வது படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இதன் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் வெங்கட் பிரபு - வைபவ் இருவரும் ஜாலியாக பேசிய வீடியோ ரசிகர்கள் க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வீடியோவில்,” தமிழ் சினிமாவில் இது கஷ்டமானது. நான் அறிமுகப்படுத்திய ஒருவர் எப்படி 25 படங்களில் நடித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு அதற்குள்ளாக வயதாகிவிட்டதா எனத் தெரியவில்லை. இபோதுதான் அறிமுகப்படுத்தியதுபோல் இருக்கிறது. அதைபற்றி அவரிடமே கேட்கலாம். வாங்க.. ரணம் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல விமர்சனமும் கிடைத்துள்ளது. கிண்டலுக்கால சொல்லல. நிஜமாகவே படம் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள் வைபவ் என்றார்.
இந்த வீடியோவில் பதிலளித்த வைபவ், “தினமும் இரவுப் பகலாக நடித்து 25 படங்கள் நடித்துவிட்டேன். நீங்கள் பார்த்து விட்டு கருத்து கூறுங்கள். சரோஜா மாதிரி த்ரில்லர் படம். இடைவேளையில் டீ குடிக்கக் கூட செல்லாமல் படம் பார்ப்பீர்கள்” என ஜாலியாக பேசினார். அதோடு வெங்கட் பிரவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நல்ல படம் நடித்ததாகவும் வைபவ் தெரிவித்துள்ளார்.
த்ரில்லர் படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
த்ரில்லர் படம் எப்படியிருக்கு?
“ரணம் அறம் தவறேல்” படம் குற்றமும், விசாரணையும் என ஒரு க்ரைம் த்ரில்லர் பட பாணியில் உருவாக்கப்படுள்ளது.
சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் கால், கை, உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகின்றன. காவல் நிலையத்தில் குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி எழுதுபவரும், குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான வைபவ் விசாரணைக்கு உதவ வருகிறார். அவரின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என தெரிய வருகிறது. அதேசமயம் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இதனால் வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது. இவரும் வைபவ் இருவரும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருக்கின்றன. இறுதியாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? என்பதை இறுதியாக ரணம் அறம் தவறேல் படத்தின் கதையாகும்.
அரோல் குரோலியின் பின்னணி இசை படத்துக்கு பலம். காவல்துறை விசாரணைக்கு உதவும் வைபவ் போலீசாரை விட க்ரைம் கண்டுபிடிப்பதில் காட்டும் தீவிரம் என்ற கேள்விக்கான விடை சரியாக சொல்லப்பட்டாலும் அவை இரண்டாம் பாதி திரைக்கதையில் ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறது. ஆக மொத்தத்தில், க்ரைம் த்ரில்லர் படம் பார்க்க விரும்புவர்கள் நிச்சயமாக ரணம் படத்தை பார்க்கலாம்.