சுதா கொங்காரா


ஜோதி ராவ் புலே தனது மனைவியை பள்ளிக்குச் சென்றதை சார்வர்க்கரோடு குழப்பிக் கொண்டு பேசி சர்ச்சரிக்கு உள்ளானார் இயக்குநர் சுதா கொங்காரா. இந்த விஷயம் இணையத்தில் பெரியளவில் சர்ச்சையாக தொடங்கிய போதே தான் தவறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். சுதா கொங்காரா இயக்கத்தில் சமீபத்தில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் சர்ஃபிரா வெளியானது. விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இப்படத்திற்கு வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அக்‌ஷய் குமாரின் 150 ஆவது படமாக உருவான இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயினெமெண்ட் தயாரித்துள்ளது. 


இந்தியில் அவ்வபோது படங்களை இயக்கினாலும் சுதா கொங்காரா தமிழில் அதிகமாக படங்களை இயக்கவே விருப்பப் படுகிறார். தனது அடுத்த படமாக சூர்யாவின் 43 ஆவது படமாக புறநாநூறூ படத்தை இயக்கவிருந்தார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் , விஜய் வர்மா , நஸ்ரியா நஸிம் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்த அதிகாரப் பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் தனது அடுத்த படம் நிச்சயம் தமிழில் தான் என்று சுதா கொங்காரா உறுதியாக கூறி வருகிறார். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப் படுத்திய கதை ஒன்றை தான் படமாக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் என்ன பிரச்சனை


தமிழில் தொடர்ச்சியாக படங்களை இயக்க விருப்பப் பட்டாலும் தமிழில் போதுமான பட்ஜெட் இல்லாதது தனக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அண்மையில் தெரிவித்துள்ளார் சுதா கொங்காரா. ஒரு படத்தின் பட்ஜெட் போதுமானதாக இல்லை என்றால் ஒரு படத்தை எடுத்து முடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தான் அடிக்கடி எதிர்கொள்ளும் சவாலாக சுதா கொங்காரா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நோய்த் தொற்று பரவலுக்குப் பின் ஓடிடி பார்கெட் வளர்ந்தது திரையரங்கத்தைக் காட்டிலும் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுவது குறித்தும் அவர் பேசினார். தற்போது ஓடிடி மோகம் குறைந்த் மீண்டும் மக்கள் திரையரங்கத்தை நோக்கி வருகிறார்கள். இந்த சமயத்தை இயக்குநர்கள் முடிந்த அளவிற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.