இந்தியா பாகிஸ்தான் போர்
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களில் 9 இடங்களில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட அப்பாவி மக்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதாமாக தற்போது பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் நடத்திய ட்ரோன் தாக்குதல் சூழலை மோசமாக்கியுள்ளது. மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் 15 இடங்களில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை இடைமறித்த பின்னர், ஜம்மு மற்றும் பதான்கோட்டில் உள்ள ராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியா விரைவாக முறியடித்தது.
இணையத்தில் பரவும் போர் காணொளிகள்
சமூக வலைதளம் முழுவதும் இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடர்பான பல வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளின் தரப்பில் இருந்தும் நெட்டிசன்கள் அவரவர் ராணுவ தாக்குதல்களின் வீடியோக்களை பெருமையாக வெளியிட்டு வருகிறார். இதில் பல வீடியோக்கள் மற்றும் தகவல்கள் போலியானவை. செய்தி நிறுவனங்கே பல்வேறு போலியான தகவல்களை வெளியிட்டு வருவது தான் இதில் ஆகப்பெரும் வேடிக்கை. ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என மக்களுக்கு இந்திய அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
திரைப்பட இயக்குநர் ராஜமெளலி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் " இந்திய ராணுவத்தின் ஏதேனும் நடமாட்டத்தைக் கண்டால், அதைப் படம் எடுக்கவோ அல்லது வீடியோ எடுக்கவோ வேண்டாம். எதிரிக்கு உதவுவதாக இருக்கலாம் என்பதால் அவற்றைப் பகிர வேண்டாம். சரிபார்க்கப்படாத செய்திகள் அல்லது கூற்றுக்களை அனுப்புவதை நிறுத்துங்கள். எதிரி விரும்பும் சத்தத்தை மட்டுமே நீங்கள் உருவாக்குவீர்கள். அமைதியாகவும், எச்சரிக்கையாகவும், நேர்மறையாகவும் இருங்கள். வெற்றி நம்முடையது." அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்