தாக்குதலை நிறுத்துமா பாகிஸ்தான்
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்களில் 9 இடங்களில் இந்தியா ஆபரேஷ சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட அப்பாவி மக்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதாமாக தற்போது பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் நடத்திய ட்ரோன் தாக்குதல் சூழலை மோசமாக்கியுள்ளது. மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் 15 இடங்களில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை இடைமறித்த பின்னர், ஜம்மு மற்றும் பதான்கோட்டில் உள்ள ராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியா விரைவாக முறியடித்தது. இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் தேர்வு பாகிஸ்தானிடம் உள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருந்தார். பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தும்வரை இந்தியா பதில் தாக்குதலை தொடரும் என்பதால் இதனால் அடுத்தடுத்த நாட்களில் எல்லைப் புற மக்கள் தங்கள் உயிர்குறித்தான அச்சத்தில் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான் பதிவு
இந்தியா பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்கள் இந்தியாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள். இப்படியான நிலையில் இசையமைபபாளர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு அவரை பெரும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. தனது எக்ஸ் பக்கத்தில் ரஹ்மான் சமாதானத்தின் சின்னமான வெள்ளை புறாவை பதிவிட்டிருந்தார் . இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என அவரை கடுமையாக தாக்கத் தொடங்கினார்கள். கடும் விமர்சனங்களுக்குப் பின் ரஹ்மான் தனது பதிவை நீக்கினார். ஆனாலும் அவர் மீதான சைபர் தாக்குதல் தொடர்ந்தபடி இருக்கிறது. ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு சமீபத்தில் விவாகரத்தை அறிவித்திருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் பலர் ரஹ்மானின் குடுமபத்தையும் சேர்த்து திட்டி வருகிறார்கள்.
பஹல்காம் தாக்குதலில் இந்தியர்கள் கொல்லப்பட்ட போது அமைதியாக இருந்த ரஹ்மான் தற்போது பாகிஸ்தானுக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கிறார் என ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னும் சில எல்லை மீறி 'இதே சகிப்புத்தன்மையை உங்கள் மனைவியிடம் காட்டியிருக்கலாமே' என்று பதிவிட்டுள்ளார்கள்.