வாலி படத்தின் மூலம் திரையுலத்திற்கு இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து குஷி படத்தை இயக்கிய அவர், நியூ, அன்பே ஆருயிரே படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், அதன் பின்னர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு   ‘இசை’ என்கிற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து, இசையும் அமைத்து இருந்தார்.






அதன் பின்னர் முழுக்க முழுக்க நடிப்பில் இறங்கிய எஸ்.ஜே.சூர்யா  ‘இறைவி’ படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வந்த ஸ்பைடர் படத்தில் வில்லனாக மிரட்டிய அவர் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து அசத்தினார். இதனையடுத்து மீண்டும் கதாநாயகன் பாதைக்கு வந்த எஸ்.ஜே.சூர்யா மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். பின்னர் மீண்டும் மாநாடு படத்தில் வில்லனாக களமிறங்கினார்.






புதியபடம் 


அதில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப்படம் காரை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாகவும் இதற்காக ஜெர்மனியில் கார் ஒன்றை வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.