தமிழ் சினிமாவில் சிறுத்தை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சிவா. அந்த படம் இவருக்கு கொடுத்த வெற்றியின் அடையாளமாக அன்றிலிருந்து இன்றுவரை சிறுத்தை சிவா என்றே அழைக்கப்படுகிறார். சிறுத்த படத்திற்கு பிறகு வீரம் , வேதாளம் , விவேகம் ,விஸ்வாஸம் என அடுத்தடுத்த அஜித் படங்களை எடுத்திருந்தார். அஜித்தை வைத்து அதிகம் படம் எடுத்த இயக்குநர்களுள் ஒருவர் சிவா என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் மற்றும் சிவா இருவருக்குமான நட்பு நீண்டகாலமாக தொடர்ந்ததாலோ என்னவோ , ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்குமான புரிதல் வேறு லெவலில் இருக்குமாம் . இது குறித்து இயக்குநர் சிவா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 






 



அதில் ” நாம சொல்லி விளக்குவதை விட நடித்து காட்டினால் இன்னும் எளிமையாக புரியும் அல்லவா.அதனால நான் எல்லா நடிகர்களுக்கும் நடித்து காட்டுவேன். ஆனால் நான் கேமராவுக்கு முன்னால நடிக்க மாட்டேன். பல சமயங்களில் நான் நடித்து காட்டுவது போலவே நடித்து, மிகப்பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கிவிடுவார் அஜித் சார். நான் இப்படியாகத்தான் காட்சி வரும்னு மனசுல ஒன்னு வச்சுருப்பேன். அதை அப்படியே உடைத்துவிட்டு அஜித் சார் வேறு மாதிரியாக வருவார்.  நான் இப்படி நினைக்கவே இல்லை.. சார் அதை விட பிரமாதமாக வந்திருக்கு சார்னு அவர்க்கிட்ட சொன்ன தருணங்கள் பல. விஸ்வாசம் படத்துல இடைவேளை பிளாக்ல , ரவுடிகள் ஓடி வரும்பொழுது , வாடா என ஒரு டயலாக் சொல்லனும். அதை நான் வேறு மாதிரியாக யோசித்திருந்தேன். அவர் வேறு மாதியாக பண்ணியிருந்தாரு. சாராயம் குடிக்குறவங்கள அடிக்குற மாதிரி ஒரு காட்சி. அப்போ ஏன் நீங்க குடிக்க மாட்டீங்களானு ஒருத்தர் கேட்பாரு. குடிப்பேன்.. ஆனா எங்க பாட்டி குடிக்க கூடாதுனு சொல்லுச்சு , அன்னையில இருந்து குடிக்குறது இல்லை. பெரியவங்க சொன்னா கேட்கனும்ல. அப்படினு டயலாக் வச்சிருந்தேன். அதை அஜித் சார் மிமிக்ரியா பண்ணுறது போல சும்மா எழுதியிருந்தேன். ஆனால் அவர்கிட்ட சொல்லல. ஆனா  பாட்டி மாதிரியே சிங்கிள் டேக்ல பேசி  எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாரு” என சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் சிவா.