பிரபல நடிகர் பாலா உடல்நலக்குறைவால் கொச்சினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மருத்துவமனையில் அனுமதி


இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா கல்லீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொச்சினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரமும் சிகிச்சைக்காக இதே மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாலாவிற்கு சாப்பிடுவதில் சிரமம் இருந்தாக கூறப்பட்டுள்ளது.


பாலாவின் தாயார், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் உடன் இருக்கின்றனர். இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக, ஃபேஸ்புக்கில் சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருர்ந்தார். 


பாலாவின் திரையுலக பயணம்


நடிகர் அஜித்தின் வீரம் படத்தில் அவருக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சிறுத்தை சிவாவின் தம்பியும் இவர். கடந்த 2003 ஆம் ஆண்டு அன்பு என்ற படத்தின் மூலம் தமிழ் திரப்பட உலகில் அறிமுகமானார். அன்பு, வீரம் ,காதல் கிசு கிசு போன்ற படங்களில் நடித்து பிரலமானார். ரசிர்களின் மனம் கவர்ந்தவர். இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாடகி அம்ருதாவை 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.




மேலும் வாசிக்க.


CM MK Stalin: மகளிருக்கான புதிய கொள்கை விரைவில் வெளியீடு - மகளிர் தின வாழ்த்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


Coronavirus Cases India: ஒரே நாளில் 334 பேருக்கு பாதிப்பு..! இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..?