ஷங்கர்
இந்திய சினிமாவின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவராக இருந்து வருகிறார் இயக்குநர் ஷங்கர். திரைப்படங்களில் பாடல்கள் , சண்டைக் காட்சிகள் தனது பிரம்மாண்டத்திற்கு பெயர்போனர்வர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய இந்தியன் 2 வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இந்தியன் 3 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் . குறிப்பாக இந்தியன் 2 சரியாக திரையரங்கில் ஓடாடததால் இந்த முறை பெரியளவில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்தியன் 3 படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் இயக்கும் கேம் சேஞ்சர் படமும் வெளியாக இருக்கிறது. இந்த இரு படங்களுக்கு பின் மிகப்பெரிய நாவல் ஒன்றை படமாக்க இருக்கிறார் ஷங்கர். சு வெங்கடேசன் எழுதிய வீர யுக நாயகன் வேள்பாரி நாவலை படமாக்கும் உரிமத்தை ஷங்கர் வாங்கியுள்ளார்.
மதுரையில் கீழடி நாகரிகம் தோன்றிய காலத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவலை மிகப்பெரிய பட்ஜெட்டில் ஷங்கர் இயக்க இருக்கிறார். இப்படம் ராஜமெளலியில் பாகுபலி 2 ஆம் பாகத்தின் வசூலை மிஞ்சும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. வேள்பார் நாவலை ஷங்கர் படமாக்க இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த நாவல் வெகுஜன மத்தியில் பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது. நேரடியாக இல்லையென்றாலும் நாவலில் இருப்பது போன்ற கதை அமைப்புகள் மற்ற படங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்து ஷங்கர் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வேள்பாரி நாவலில் இருந்து காட்சிகளை பயன்படுத்தாதீர்கள்
சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் டிரைலரில் வேள்பாரி நாவலில் இருக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதை பார்த்தபோது எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அந்த நாவலை படமாக்கு உரிமத்தை வாங்கியிருப்பதால் நாவலில் இருந்து முக்கியமான காட்சிகளை அனுமதி இல்லாமல் யாரும் பயண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். திரைப்படங்களிலோ வெப் சீரிஸிலோ நாவலின் காட்சிகளை பயன்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்" என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்தின் டிரைலர் வெளியாகியது. ஷங்கர் தேவரா படத்தை தான் குறிப்பிட்டாரா என்கிற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது