ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.


ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் குகேஷ், அர்ஜுன் வெற்றிபெற்றதன் மூலம் தங்கப்பதக்கம் உறுதியானது. மகளிர் பிரிவிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே ஒலிம்பியாட் தொடரில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடர் செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கியது. 


 






இதில் இந்திய ஓபன் பிரிவில் இந்திய அணி சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் டி குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைஸ் ஆகிய இரு திறமை வாய்ந்த வீரர்களும் பங்கேற்றனர்.


இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த முறை செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெற்றது. அதில், இந்திய அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.