இயக்குனர் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 


Director Shankar : இந்தியன் 2 முதல் கேம் சேஞ்சர்.. ஜம்ப் செய்த ஷங்கர்.. கமல்ஹாசன் சொன்னது என்ன?  

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கப்பட்டு மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் தற்போது  நடைபெற்று வந்த ஷெட்யூல் முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு இருந்தே அதே சமயத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சேர்' திரைப்படத்தை இயக்க துவங்கினார். அரசியலை மையமாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை தயாரிக்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். நடிகர் ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வர இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார் தமன்.


படத்தின் திரைக்கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு மற்றும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.


 



அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனுடன் கைகுலுக்குவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார். மேலும் அதனுடன் "இந்த பவர் பேக் ஷெட்யூலுக்கு நன்றி. மீண்டும் மே மாதம் சந்திப்போம்... கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து கேம் சேஞ்சேர் நகர்கிறேன்" என்ற போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஷங்கரின் இந்த போஸ்ட் சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.