இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் விவாகரத்து செய்யவுள்ளார் என திரையுலக வட்டாரம் பேசி வருகிறது.

1993 ஆம் ஆண்டு ஜெண்டில் மேன் படத்தை இயக்கி, தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குநராக ஷங்கர் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், நாயக், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 ஆகிய பிரமாண்டமான படங்களை இயக்கினார்.

தற்போது, ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தையும், கமலை வைத்து இந்தியன் 2 படத்தையும் இயக்கிவருகிறார். இவர் ஒரு பக்கம் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்க, இவரின் இளைய மகள் அதிதி ஷங்கர் விருமன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி  சிவகார்த்திகேயனின் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இன்றளவும் சிலர், ஷங்கருக்கு அதிதி எனும் ஒரே மகள் மட்டும்தான் உள்ளார் என்று நினைத்து வருகின்றனர். ஆனால், ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி, அர்ஜித் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஷங்கரின் மூத்த மகளாகிய ஐஸ்வர்யா பற்றிய அதிர்ச்சி தரும் தகவல் இப்போது பரவிவருகிறது. சினிமா பக்கமே எட்டிப்பார்க்காத ஐஸ்வர்யாவிற்கு கிரிக்கெட் வீரர் மற்றும் தொழிலதிபரான ரோஹித்துடன் 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. 

ரோஹித்தின் அப்பா நடத்தி வரும் கிரிக்கெட் கிளப்பில் பயிற்சி பெற்று வரும் ஒரு 16 வயது பெண்ணுக்கு, அங்குள்ள தாமரைக்கண்ணன் என்ற பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதானார். புகாரளிக்கப்பட்டும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் கிளப் நடவடிக்கை எடுக்காததால், அந்த புகார் போலீசாரிடம் சென்றுள்ளது. இதனால் ரோஹித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் ஒரு பக்கம் நடக்க, அதிதி தனது வீட்டில் புத்தாண்டை தன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இன்ஸ்டாவில் புத்தாண்டு கொண்டாட்ட வீடியோவை பதிவு செய்த இவர், தனது அக்காவை மிஸ் பண்ணுவதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தனது கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஐஸ்வர்யா சோகமாக உள்ளார் என்றும் அதனால்தான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென்றும், விவாகரத்து குறித்து முடிவு செய்யவுள்ளார் என்றும் தகவல் பரவிவருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக ஷங்கர் குடும்பத்தினர் இதுகுறித்த எந்தத் தகவலையும் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.