Adithi Shankar: புலிக்கு பிறந்தது பூனையாகுமா... ஷங்கர் மகள் அதிதி பாடகி - நடிகை... தெறிக்கவிடலாமா !



தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ள  பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர். அவரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். படத்திற்கு படம் வித்தியாசங்களை அள்ளி கொடுக்கும் நடிகர் கார்த்தியின் ஜோடியாக விருமன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.  


முதல் தெலுங்கு பாடல் சூப்பர்ஹிட் :


அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்னரே பாடகியாக அறிமுகமாகிவிட்டார். இயக்குனர் கிரண் கொரப்படி இயக்கத்தில் இசையமைப்பாளர் s. தமனின் இசையில் கானி எனும் படத்தில் ரோமியோ ஜூலியட் என்ற ரொமான்டிக் பாடலை பாடியுள்ளார். இந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கர் வருண் தேஜ் ஜோடியாக நடித்துள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யப்பட்ட இந்த பாடல் பல லைக்ஸ்களை குவித்து வருகிறது. 


 



முதல் தமிழ் திரைப்பாடல் :


அந்த வகையில் தமிழ் சினிமாவிலும் தனது முதல் டூயட் பாடலை பட்டுள்ளார் அதிதி ஷங்கர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் விருமன் திரைப்படத்தில் "மதுர வீரன்" என்ற டூயட் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவோடு சேர்ந்து பாடியுள்ளார். இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அதிதி ஷங்கர். அவர் ஷேர் செய்துள்ள இந்த பாடலுக்கு பல தங்களின் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது. இது நிச்சயம் சூப்பர் ஹிட் பாடலாக ரசிகர்களை கவரும். 



விருமன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா எங்கு ? எப்போது ?


விருமன் திரைப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும்பாலும் ஆடியோ வெளியீடு மற்றும் படத்தின் ட்ரைலர் விலகல் அணைத்து சென்னையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஒரு வித்யாசமான முயற்சியை எடுத்துள்ளனர் வுமன் பட குழுவினர். அதாவது விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறவுள்ளது என அறிவித்துள்ளனர். இந்த விழாவிற்கு இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா மற்றும் பல திரையுல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.  சமீபத்தில் இப்பாடத்தில் சித் ஸ்ரீராம் பாடிய "கஞ்சா பூ கண்ணால..." பாடல் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. பல மில்லியன் பார்வைகளை இப்பாடல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.