கருடன் ரீமேக் பைரவம்
சூரி நாயகனாக நடித்து கடந்த ஆண்டு தமிழில் வெளியான படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கி சசிகுமார் , உன்னி முகுந்தன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இப்படம் தமிழில் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் பைரவன் என்று ரீமேக் செய்யப்படுள்ளது
மே 30 ஆம் தேதி வெளியாகும் பைரவன்
பென் ஸ்டுடியோஸ் சார்பாக கே.கே ராதாமோகன் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் காடா இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். விஜய் கனகமேடலா இந்த படத்தை இயக்கியுள்ளார். பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீனிவாஸ் , நாரா ரோகித் , மன்சு மனோஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜெயசுதா, திவ்யா பிள்ளை, சம்பத் ராஜ், சந்தீப் ராஜ், அஜய், அதிதி சங்கர், ஆனந்தி, ராஜா ரவீந்திரன், சரத் லோஹிதாஷ்வா, வெண்ணெலா கிஷோர் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அதிதி ஷங்கர் நடனத்தால் ரசிகர்கள் அதிருபதி
இந்த நிகழ்வில் படத்தில் இடம்பெற்ற கிச்சமாகு பாடலுக்கு படக்குழு நடனமாடினார்கள். அப்போது பெல்லம்கொண்டா ஶ்ரீனிவாஸ் உடன் அதிதி ஷங்கர் நடனமாடியது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து வரும் அதிதி மார்கெட்டை பெரிதாக்க கமர்சியலான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.