தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர்  தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படமும் நடிகர் ராம் சரண் ஆர்சி 15 எனும் திரைப்படத்தையும் இயக்குவதில் பிஸியாக இருந்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இந்த இரண்டு படங்களை தொடர்ந்து அடுத்ததாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள சரித்திர நாவலான 'வேள்பாரி' நாவலை அடிப்படியாக கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க உள்ளார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 


 



 


தொடராக வெற்றி பெற்ற நாவல் படமாகிறது :


வார இதழில் தொடராக வெளியாகிய இந்த நாவல் வாசகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பறம்பு மலையை ஆட்சி செய்து வந்த மன்னர் மற்றும் சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட வேள்பாரி மன்னரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் ஷங்கர்  திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் வேள்பாரி மன்னன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


 






 


பெரிய பட்ஜெட் திரைப்படம் :


1000 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக உள்ள இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என்றும் இப்படத்தில் கேஜிஃஎப் யஷ் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் வரும் ஜனவரி 2023ல் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 







விருமன் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கொடுத்த ஹிண்ட்:
 
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசிய போது எழுத்தாளர் சு. வெங்கடேசனுடன் இணைந்து ஒரு ஸ்வாரஸ்யமான பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகும் என கூறியிருந்தார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவில் எழுத்தாளர் சு. வெங்கடேசன் கலந்து கொண்டு  இருந்தார்.