அமரன் வெற்றிவிழாவில் கமல் 

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் 100 ஆவது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சாய் பல்லவி பற்றி அவர் பேசியது. தமிழில் முன்னதாக தனுஷின் மாரி 2 , மற்றும் என்.ஜி.கே ஆகிய படங்களில் சாய் பல்லவி நடித்திருந்தார் இந்த படங்கள் குறித்து பேசிய கமல்ஹாசன் இப்படி கூறினார்.  

நீங்கள் வெறும் ரவுடி பேபி இல்லை

"சாய் பல்லவி என்னை சந்தித்த போது என்னை இன்னும் ரவுடி பேபியாக மட்டுமே பார்க்கிறார்கள் என்று என்னிடம் வருத்தப்பட்டார். ஆனால் நீங்கள் ரவுடி பேபி மட்டும் இல்லை என்று எனக்கு தெரியும். ஏனால் நீங்கள் நடித்த படங்கள் பேசப்படவில்லை என்றாலும் உங்களது நடிப்பு பேசப்பட்டது. நான் படத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை ஏனால் பட ஓடவில்லை ஆனால் உங்கள் நடிப்பு பேசப்பட்டது என்றால் படத்தை எடுத்தவர் கவலைப்படுவார் " என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் 

செல்வராகவன் வெளியிட்ட வீடியோ

கமல்ஹாசன் என்.ஜி.கே மற்றும் தனுஷின் மாரி படத்தை குறிப்பிட்டு அப்படி பேசியதாக பலர் தெரிவித்து வந்தார்கள். இப்படியான கமலுக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் செல்வராகன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முள்ளும் மலரும் படத்தில் ரஜினி பேசும் "ரெண்டு கையும் காலும் இல்லைனா கூட இந்த காளி பொளச்சுக்குவான் சார். கெட்ட பையன் சார் இந்த காளி" என்கிற வீடியோவை செல்வராகவன் பகிர்ந்துள்ளார்