குட் பேட் அக்லி

அஜித்தின் கரியரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவெடுத்துள்ளது குட் பேட் அக்லி. த்ரிஷா இல்லனா நயன்தாரா , மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , த்ரிஷா , யோகி பாபு ஆகியோர் படத்தில் நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் இப்படம் திரையரஙகில் வெளியாக இருக்கிறது.

அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்

கடந்த இரு ஆண்டுகள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு பேக் டூ பேக் ட்ரீட்டாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படம் அமைந்துள்ளன. குறிப்பாக குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தை வேற மாதிரி மாஸாக காட்டும் என எதிர்பார்க்கலாம்.

படத்தின் இயக்குநர் ஆதிக் ஒரு முரட்டு அஜித் ரசிகர் என்பதால் இப்படத்தை அணு அணுவாக செதுக்கி வருகிறார்.

குட் பேட் அக்லி டீசர்

குட் பேட் அக்லி படத்தின் டீசர் பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியாகும் என்றும் அதை தொடர்ந்து படத்தின் முதல் பாடலும் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அஜித்தின் வெவ்வேறு  லுக் அவரது கதாபாத்திரம் பற்றிய ஆவலை கூட்டியுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் அஜித்தின் கதாபாத்திரம் பெயர் ரங்கா என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மங்காத்தா படத்தில் அஜித் கேரக்டர் இருந்ததை விட இரு மடங்கு அதகளம் செய்யும் கேரக்டராக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது 

மேலும் படத்திற்கு பின்னணி இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் இணைந்துள்ளதும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கரியர் பெஸ்ட் இசையை இந்த படத்தில் வழங்க இருப்பதாக ஜி.வி பிரகாஷ் நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.