தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் சீனு ராமாசாமி அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. செட்களில் எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு கொண்ட சென்ற சிறப்பு இவரையே சேரும். தமிழ்நாட்டின் அழகியலை சினிமா மூலம் கொண்டு சேர்த்த புகழும் இவரையே சேரும். தேனி மாவட்டத்தில் பிறந்த இவர், 16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கினார். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க முடியாத இனிய பாடல்களை கொடுத்தவர்.  ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுக செய்தவர். இவர் சில படங்களிலும் நடித்து உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். 


6 தேசிய விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள், ஆறு தமிழ்நாடு மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார். சினிமாவிற்கு செய்த பங்களிப்பிற்காக மத்திய அரசு கடந்த 2004ஆம் ஆண்டு பாரதிராஜவுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தது. பாரதிராஜா பல இளம் திரைப்பட தயாரிப்பாளர்களை உற்சாகப்படுத்தினார் மற்றும் திரைப்பட தயாரிப்பில் பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சினிமா (BRIIC) என்ற பள்ளியை நடத்தி வருகிறார்.


ABP நாடு Exclusive: ‛அதை உடைக்கணும்... அதான் வந்தேன்....’ ‛லேடி தல’ நிவேதா பெத்துராஜ் சிறப்பு பேட்டி!


இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 79 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ் திரையுலகினர் உள்ளிட்ட பலர் தொலைபேசி மற்றும் சமூகவலைதளங்கள் மூலமாக வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி பாரதிராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.


 


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 






எங்கள் தெற்கத்தியகிராமங்களின் 
ஒற்றையடிப் பாதை
ஓணான் காட்டில் கலைப் 
பயிரிட்ட மேதை


வாழ்த்தி வளர்ப்பதில்
தந்தை


என் இனிய தமிழ்மக்களே என்றழைத்து
வெள்ளித் திரையில்
இருகரம் கூப்பி
மக்களை வணங்கிய


இயக்குனர் இமயம் 
பாரதிராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 


TR Sundaram Birthday: தமிழில் முதல் கலர் திரைப்படம்..! மலையாளத்தில் முதல் பேசும் படம்..! தமிழில் முதல் ஹாலிவுட் கலைஞர்கள்...! - யார் இந்த டி.ஆர்.சுந்தரம்?