இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் முதல்பாகம் கடந்த வாரம் வெளியாகி, இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 


குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ் படங்களில் அதிக வசூலை பொன்னியின்  செல்வன் பெற்றுள்ளது. 200 கோடியை தாண்டியுள்ள அதன் வசூல், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் தொடர்வதால், பல மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தவர்கள், படிக்காதவர்கள் என இருவேறு தரப்பு விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அதை கடந்து படத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. 


சினிமா உலகைச் சேர்ந்த பலரும் பொன்னியின் செல்வன் படைப்புக்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதெல்லாம் ஒருபுறமிருக்க, சிலர் படம் பற்றி தங்கள் கருத்தை விமர்சனமாகவும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிறந்த படைப்புகளை தரும் இயக்குனர் சீனுராமசாமி, தனது விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 


‛பொன்னியின் செல்வன் படம்


உருவகம் உள்ளடக்கம் நவீன சினிமா மொழியின் நேர்த்தி


உள்ளார்ந்த உற்சாகம் தரும் இசை ஒளிப்பதிவு சிறப்பு


நடித்தவர்களின் உழைப்பு வியப்பு


வெகுஜன திரை எழுத்தில் உருவாகும் விதத்தில் கவனம்


இயக்குனர் மணிரத்னம் அவர்களின் முத்திரை சினிமா இது,


வாழ்த்துகிறேன்’’


என அந்த பதிவில் இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். தான் படத்தை பார்த்த வரையில், தனக்கு தோன்றியதை எழுதியுள்ள அவர், அனைத்தையும் பாராட்டிய நிலையில், ‛வெகுஜன திரை எழுத்தில், உருவாகும் விதத்தில்’ என்கிற தலைப்பில் ‛கவனம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இந்த கருத்து தான் கவனம் கொள்ள வேண்டிய கருத்தாக உள்ளது. 






சீனு ராமசாமியின் இந்த கருத்திற்கு சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு பதில் அளித்து வருகிறார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான் என்றாலும், இதற்கு முன் வேறு இயக்குனர்களின் படங்களை பிற இயக்குனர்கள் விமர்சிக்கவில்லை. அப்படி பார்க்கும் போது இது முதன்முறை. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண