Siddique: பிரண்ட்ஸ் படத்தை இயக்கி நேசமணியை மீம்ஸ்களில் கொண்டாட வைத்த இயக்குநர் சித்திக் மறைவுக்கு சூர்யா, ஃபகத் பாசில் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். 


மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானவர் தான் இயக்குநர் சித்திக். கேரளாவில் கலாபவன் நடத்தும் மிமிக்ரி குழுவில் தனது கலை பயணத்தை தொடங்கிய சித்திக், மலையாளத்தில் சில படங்களை இயக்கி வெற்றிப்பெற்றார். இவரது இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளிவந்த ஹரிஹர் நகர் மற்றும் காட்பாதர் படங்கள் ஹிட் அடித்தது. காட் ஃபாதர் படத்துக்காக கேரள அரசின் விருதை சித்திக் பெற்றிருந்தார்.


மலையாளம் மட்டும் இன்றி தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். குறிப்பாக பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, சாதுமிரண்டா, காவலன் உள்ளிட்ட நகைச்சுவை கொண்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இன்றும் எங்கள் அண்ணா, பிரண்ட்ஸ் காமெடிகளுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. பிரண்ட்ஸ் படத்தில் நேரமணியாக வடிவேலுவை வைத்து எடுக்கப்பட்ட காமெடி காட்சிகள் மீம்ஸ்களுக்கு தீனியானது. 




இப்படி நகைச்சுவை கலந்த பேமிலி டிராமா படத்தை கொடுப்பதில் சித்திக் தனி அடையாளமாக திகழ்ந்தார். அண்மை காலமாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சித்திக் கடந்த ஜூலை 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகம் செயலிழந்த நிலையில், எக்மோ சிகிசை அளிக்கப்பட்டு வந்தது. 


இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சித்திக் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. கொச்சியின் கடவந்த்ராவில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் சித்திக் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிந்த நடிகர் லால் சித்திக் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். 






மலையாள நடிகர் மம்முட்டி சித்திக் உடலுக்கு அஞலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். 






நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பதிவு மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரண்ட்ஸ் படத்தில் சித்திக்குடன் பணிபுரிந்த தருணத்தை மறக்க முடியாது என்றும், அனைவரிடமும் அன்பாக பழகும் அவரது குணத்தை யாராலும் நிரப்பிஅ முடியாது என்றும் கூறி உள்ளார். 






தொடர்ந்து ஃபகத் பாசில், துல்கர் சல்மான், ஜுனியர் என்டிஆர் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் சித்திக் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.