இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி பணமதிப்பிழப்பீன் போது படு வைரலானது. இந்தக் காட்சியும் இன்றைக்கும் ரசிக்கும் படியே அமைந்தன. அதைபோன்று அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் இப்படத்தில் நல்லபடியாகவே ஒர்க் அவுட் ஆனது ரசிகர்களை கண் கலங்க வைத்த காட்சிகள் ஏராளம் உள்ளன.
மீண்டும் இணையும் பிச்சைக்காரன் கூட்டணி
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பெயரும் திரை ரசிகர்களை ஈர்த்துள்ளது. விஜய் ஆண்டனி தான் நடிக்கும் படங்களில் வித்தியாசமான கதை இருப்பதை விரும்புவதை போன்று பட டைட்டில் மீதும் அதீத அக்கறை செலுத்துவார். அதற்கு எடுத்துக்காட்டாக சைத்தான், சலீம், மார்கன், நான், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களை கூறலாம். அந்த வகையில் சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு 'நூறுசாமி' என வைத்துள்ளனர்.
படத்தின் முதல் வரிதான் டைட்டிலா!
பிச்சைக்காரன் சென்டிமென்டை நினைவுப்படுத்துவது போன்று புதிய படத்தின் டைட்டில் இருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற நூறுசாமிகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் ஆகிடுமா பாடலின் முதல் வரியை படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். எனவே இப்படம் பிச்சைக்காரன் படத்தின் மூன்றாம் பாகமா அல்லது அந்த படத்தின் கதையோடு தொடர்புள்ள கதையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 படத்தை காட்டிலும் பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சசி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பட தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் 2026ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி வெளியாகும் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் முக்கிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.