நடிகர் அஜித் திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் விஜய் படம் பார்த்த நிகழ்வை இயக்குநர் சரண் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சரண். அவர் இப்போது பீக்கில் இல்லை என்றாலும் சரண் இயக்கிய காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அட்டகாசம், வட்டாரம், ஜெமினி ஜே ஜே, மோதி விளையாடு, வசூல் ராஜா எம்பிபிஎஸ், இதயத்திருடன், அசல் என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அதேசமயம் சில படங்களை தயாரித்தும் உள்ளார். இயக்குநர் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலையில், சரணின் ஒவ்வொரு படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. 


இதனிடையே சரண் அஜித்துடன் மட்டும் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என 4 படங்களில் பணியாற்றியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் நல்ல நெருக்கம் உண்டு. அஜித், ஷாலினி இடையே காதல் ஏற்பட காரணமானவர்களில் சரணும் ஒருவர். இப்படியான நிலையில் சரண் நேர்காணல் ஒன்றில் தானும், அஜித்தும் யாருக்கும் தெரியாமல் விஜய் படம் பார்த்த நிகழ்வை பற்றி பேசியுள்ளார். 


அதில், “நானும், அஜித்தும் சேர்ந்து விஜய் நடித்த வில்லு படம் பார்த்தோம். நாங்கள் தியேட்டரில் யாருக்கும் தெரியாமல் சென்று பார்த்தோம். அப்போது பிரார்த்தனா தியேட்டர் எங்களுக்கு வசதியாக இருந்தது. காருக்குள் இருந்தவாரே பார்த்தோம். உள்ளே போகும்போது அஜித் சீட்டில் படுத்து விடுவார். அவர் வந்தது கடுகளவு  கசிந்தால் கூட மொத்த கூட்டமும் கூடிவிடும். அதேபோல் நாங்கள் இருவரும் ஷிவா நடித்த தமிழ்படம் பார்த்தோம். மற்ற தமிழ் சினிமாக்களை கலாய்த்து எடுக்கப்பட்ட அந்த படத்தை விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்” என தெரிவித்திருந்தார். 


சினிமாவில் விஜய் - அஜித் 


தமிழ் சினிமாவை பொறுத்தவரை திரைக்கு முன்னால் தான் விஜய் - அஜித் இடையே போட்டி என்பது உள்ளது. ஆனால் திரைக்கு பின்னால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இருவரின் ரசிகர்களில் சிலர் எந்தவித புரிதலும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை விஜய், அஜித் இருவரும் அறிவுறுத்தியும் ரசிகர்கள் மாறுவதாக இல்லை. விஜய்யும் அஜித்தின் அனைத்து படங்களையும் பார்த்து, அதனைப் பற்றி கருத்து சொல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Siragadikka Aasai Serial: கோயிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியில் மீனா- சிறகடிக்க ஆசையில் இன்று!