தமிழகம் முழுவதும் பீஸ்ட் பீவர் தொற்றிக்கொண்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்துக்கான முன்பதிவு தீவிரமாக போய்க்கொண்டுள்ளது. பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு முடிந்துவிட்டது. எப்போது விடியும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்.
பேனர்கள், தோரணங்கள் என பல திரையரங்குகள் திருவிழாகோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படம் குறித்து விஜயின் தந்தை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ரசிகர்களே வணக்கம். பீஸ்ட் ரிலீசுக்காக உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன். ரசிகராக. உங்களின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் விஜய் பீஸ்ட் படம் குறித்தும், தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்தும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார். பீஸ்ட் படத்தின் முக்கிய விளம்பர நிகழ்ச்சியாகவே அது பார்க்கப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தன்னுடைய தந்தை குறித்து நெகிழ்ச்சியாக பேசினார் விஜய். அதில், ''தந்தை என்பவர் குடும்பத்தின் ஆணிவேர். கடவுளுக்கு அடுத்தபடி எனக்கு எனது அப்பாதான். நாம் மகனாக இருக்கும்போது தந்தையின் அருமை தெரியாது. தந்தையாக இருக்கும்போதுதான் அதன் அருமை தெரியும்'' என்றார். இந்நிலையில் மகன் விஜயின் படத்துக்காக காத்திருப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
இதற்கிடையே பீஸ்ட் படத்துக்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2000, 3000 வரை டிக்கெட் கட்டணம் விற்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்