இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸி ஆண்டனி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தங்கள் மீன்கள் திரைப்படம் மகள்களுக்கான படைப்பை தந்திருந்தார் ராம். பறந்து போ படத்தை மகன்களுக்கான படைப்பாக உருவாக்கியுள்ளார். பறந்து போ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததா, ராம் மீண்டும் மகத்தானை படைப்பை அளித்தாரா என்பதை இங்கு காணலாம்.

ட்விட்டர் விமர்சனம்

இயக்குநர் ராம் மீண்டும் ஒரு நல்ல படைப்பை தந்திருக்கிறார் என ரசிகர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர். இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே வந்துள்ளன. ரசிகர்களை தாண்டி திரை பிரபலங்கள் பலரும் பறந்து போ படத்தை பாராட்டி இயக்குநர் ராமை வியந்து பாராட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மிர்ச்சி சிவா மிகவும் இயல்பாக நடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். காமெடி, குறும்பு, அன்பு அனைத்தையும் தாண்டிய தந்தை மகன் பாசத்தை மிக இயல்பாக ட்ராமா இல்லாத எதார்த்தத்தை ராம் தந்திருக்கிறார். படம் பார்த்த கனமே அழுதுவிட்டேன் என ஒருவர் தெரிவித்திருக்கிறார். 

மீண்டும் பழைய நினைவுகள் 

பறந்து போ திரைப்படத்தை பார்த்த பிக்பாஸ் பிரபலம் செளந்தர்யா, மீண்டும் எனது குழந்தை பருவங்கள் நினைவுக்கு வர தொடங்கிவிட்டன. ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன். இப்படம் வெற்றி பெற ராம் சாருக்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக பாசிட்டிவான விமர்சனங்களே வந்துள்ளன. ரசிகர்கள் சிலர் இப்படத்திற்கு 5க்கு 4 மார்க் கொடுத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். காலத்தின் சூழலுக்கு ஏற்ப படங்களை தரும் இயக்குநர் ராம் மீண்டும் நிரூபித்துவிட்டார். இப்படம் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். 

வயிறு குலுங்க சிரிக்கலாம்

குழந்தைகளுக்கான  படமா? பெற்றோர்களுக்கான படமா பக்கா காமெடி படமா? கலகலவென நகரும் படமா? கமர்சியல் படமா? கருத்துள்ள படமா? என்ற யோசனை வரலாம்.  முந்தைய படங்களில் அழ வைத்த இயக்குனர் ராம், இதில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். சிவா ,கிரேஸ் ஆண்டனி, சிறுவன் மிதுல்ராயன், அஞ்சலி, அஜுவர்கீஸ் போட்டி போட்டி நடித்து ரசிக்க வைக்கிறார்கள். 2025ல் ஹிட் படம் இதுதான் என ரசிகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். குழந்தைகளை மட்டும் அல்ல தந்தைகள் போற்றப்படுகிறவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டாரம் ராம். என்ன சார் இப்படி ஒரு படம் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்திருக்கின்றனர்.