ராம் கோபால் வர்மா
சத்யா , கம்பேனி , ரங்கீலா , சர்கார் போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்திய சினிமாவில் நிறைய பல புதிய கதைக்களங்களை கொண்டு வந்தவர். ஆனால் சமீப காலத்தில் இவர் இயக்கிய படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் இவர் இயக்கிய சத்யா திரைப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் ஆனது. சமூல வலைதளத்தில் தொடர்ச்சியாக ஆக்டிவாக இருக்கும் ராம் கோபால் வர்மா நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி மாட்டிக்கொள்வது வழக்கம். தனது கடைசி படமான சிண்டிகேட் படத்தின் அறிவிப்பை ராம் கோபால் வர்மா சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் திடீரென்று ராம் கோபால் வர்மா மும்பை போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
ராம் கோபால் வர்மா கைது
கடந்த 2018 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா மீது செக் பவுன்ஸ் வழக்கு சுமத்தப்பட்டது. மகேஷ் சந்திர மிஷ்ரா என்பவர் ஶ்ரீ என்கிற நிறுவனத்தின் மூலம் இந்த வழக்கைத் தொடர்ந்தார். 5000 ரூபாய் பிணைத் தொகையாக செலுத்து இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்தார் ராம் கோபால் வர்மா. கொரோனா ஊரடங்கில் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட அவர் தனது சொந்த அலுவலகத்தை விற்றார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இவ்வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விசாரணையில் ராம் கோபால் வர்மா ஆஜராகாத காரணத்தினால் கடுப்பான நீதிபதி அவருக்கு 3 மாதம் நான் பெயிலேபிள் சிறை தண்டனை வழங்கினார். கூடுதலாக மனுதாரருக்கு ராம் கோபால் வர்மா ரூ 3.72 லட்சம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.