ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து படம் வெளியிடப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரின் அபாரமான நடிப்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாகவும் நேரடியாகவும் சென்று வாழ்த்தி வருகிறார்கள். "காந்தாரா" படத்தின் தமிழ் டப்பிங் திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தமிழில் வெளியானது. 




கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இந்த வாரத்தில் மலையாளத்திலும் வெளியாக உள்ளது.  இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா காந்தாரா படம் குறித்தும் நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப்  ஷெட்டி குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 






பெரிய பட்ஜெட் படங்கள் மட்டும் தான் மக்களை தியேட்டருக்குள் வர வைக்கும் என்று திரையுலகில் இருந்த மிகப்பெரிய கண்ணோட்டத்தை உடைத்து விட்டார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா திரைப்படம் பல ஆண்டுகளுக்கு ஒரு முக்கிய பாடமாக நிலைத்திருக்கும்.‌ மேலும் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்தும் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு மற்றும் படத்தில் வரும் காவல் தெய்வத்தின் கதாபாத்திரம் குறித்தும் பேசி உள்ளார்.






மேலும் தற்போது திரையுலகில் ரிஷப் ஷெட்டி பல குலிகா தெய்வங்கள் எல்லாம் சேர்ந்து உருவான சிவன் என்றும் வில்லன்கள் அனைவரும் 300, 400, 500 கோடி பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்கள் எனவும் காந்தாராவின் கலெக்ஷனை பார்த்து அவர்களுக்கு மாரடைப்பு வந்துவிடும்  என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பெரிய பட்ஜெட் திரைப்பட இயக்குனர்கள் யார் என்று குறிப்பிடாமல், ரிஷப் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.






ரிஷப் ஷெட்டி என்ற அரக்கனுக்கு நன்றி!  சிவா எப்படி குலிகா தெய்வத்தை கண்டு விழித்துக்கொள்வாரோ, அதேபோல் காந்தாராவின் வசூலில் இருந்து அனைத்து பெரிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களும் இரவில் திடீரென கெட்ட கனவு கண்டது போல் விழித்துக் கொள்வார்கள்.






இந்த மாபெரும் பாடத்திற்காக காந்தாராவின் இயக்குநர் மற்றும் நடிகருமான ரசிப்பு ரிஷப் ஷெட்டிக்கு நன்றி! மேலும்  திரைத்துறையினர் அனைவரும் இதற்காக உங்களுக்கு டியூஷன் பீஸ் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.