இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் டே படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 96 படத்தில் இயக்குநர் பிரேம்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் போஸ் வெங்கட் காளி வெங்கட், மைனா நந்தினி,  ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். 

இயக்குநர் ராஜ்முருகன் ஆதரவு

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் ராஜ்முருகன் குட் டே படத்தை பார்த்ததும் ஆதரிக்க வேண்டியது நமது கடமை என்று நினைத்தேன். குடியை பத்தி பேச வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும், இப்படத்தை பார்க்கும் போது ஜி.நாகராஜன், வைக்கம் பஷீர் ஆகியோரின் புத்தகங்களைப் படித்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குடியை பற்றிதான் பேசுகிறது. ஆனால், குடிப்பதை பெருமைப்படுத்தும் விதமாக இல்லை. ஒருவன் குடிகாரனாக மாற சமூகம் உருவாக்கும் அழுத்தத்தை பதிவு செய்திருக்கிறது என ராஜூமுருகன் தெரிவித்தார். 

விஜய் மல்லையா வீடியோ பார்த்தேன்

மது அருந்துவதை பத்தி பேசிய ராஜூமுருகன், அவர் மது அருந்துவதை நிறுத்துவதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் மது குடிப்பதை நிறுத்தி 10 வருடங்கள் ஆகிவிட்டது. விஜய் மல்லையாவின் நான்கு மணி நேர பாட்காஸ்ட் வீடியோவைப் பார்த்த பிறகு குடிப்பதை நிறுத்தி விட்டேன். மனதளவில் உறுதியான முடிவெடுத்திருப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. 2009ஆம் ஆண்டு நடந்த தமிழ் ஈழப் போரில் பிரபாகரன் இறந்தது குறித்த செய்திகள் வந்த போது தான் குடிப்பதை நிறுத்தினேன் என ராஜுமுருகன் தெரிவித்தார். 

செயல் தான் சிறப்பான அங்கீகாரம்

நாம் இந்த சமூகத்தை பற்றி நகைச்சுவையாக பேசலாம். சீர்கெட்டு கிடக்கிறது என்று பிறரிடம் எடுத்துரைக்கலாம்.கவலைப்பட்டு மனம் வருந்தி பேசுவதை சீர்திருத்தம் செய்வதற்கு செயல் மட்டும் மிக முக்கியமாக இருக்கிறது. குடியால் ஒரு சமூகம் எல்லா வலிமைகளையும் இழந்து தவிக்கிறது. அதற்கான ஒரு பாதை என்பதே இல்லாமல் இருக்கிறது. அது போல குட் டே திரைப்படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என ராஜூமுருகன் தெரிவித்துள்ளார்.