மகாபாரதத்தை மொத்தம் பத்து பாகங்களாக எடுக்க இருப்பதாக தனதி நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார் எஸ்.எஸ் ராஜமெளலி.


மாவீரன், நான் ஈ, பாகுபலி இரண்டு பாகங்கள்,ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களையே நாம் பிரமாண்டமான படங்கள் என்று சொல்கிறோம் தற்போது தனது இந்த படங்களை எல்லாம் ஓரங்கட்டும் வகையில் ஒரு படத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார் போலும் எஸ்.எஸ்.ராஜமெளலி.புராணக் கதையான மகாபாரதத்தை மொத்தம் பத்து பாகங்களாக எடுக்க திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார் ராஜமெளலி.


அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜமெளலியிடம் நிறைய கேள்விகள் கேட்கப் பட்டன. அதில் ஒரு கேள்வி மகாபாரதத்தை ராஜமெளலி எப்படி படமாக்க திட்டமிட்டுள்ளார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை ராஜமெளலி இதற்கு முன்பு பல இடங்களில் பகிர்ந்துள்ளார்தான் என்றாலும் இந்த முறை அவரது பதில் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது தான் மகாபாரதத்தின் வெவ்வேறு பிரதிகளை படித்து வருவதாகவும்  இந்த வாசிப்பு கிட்டதட்ட ஒரு வருடம் முழுவது தொடரலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த காலத்தில் அவர் எதையும் எழுதப் போவதில்லை என்று ராஜமெளலி கூறினார்.மேலும் மகாபாரதத்தை தன்னால் பத்து பாகங்கள் கொண்ட ஒரு திரைப்படமாக மனதில் கற்பனை செய்துபார்க்க முடிகிறது என்று ராஜமெளலி கூறியிருக்கிறார். இவரது இந்த பதிலைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் திகைத்து நிற்கிறார்கள்.


இதனைக் கேட்ட  ஒருவர் ரசிகர்களை உற்சாகப் படுத்துவதற்காக மட்டுமே அவர் இப்படி சொல்கிறாரா என்று கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு  ராஜமெளலி மகாபாரதத்தை படமாக்குவது தான் தனது வாழ்க்கியின் ஒரே லட்சியம் எனவும் இதுவரை தான் எடுத்தப் படங்கள் எல்லாம் மகாபாரத்த்தை எடுப்பதற்கான பயிற்சிகள் மட்டுமே என்று பதிலளித்துள்ளார்.மேலும் ரசிகர்களுக்காக  நாட்டு மக்களுக்காக  மகாபாரதக் கதையை படமாக்கச் சொல்லி தன்னிடம் பலர் கேட்டுக்கொண்டார்கள் என்றும்  ஆனால் தான் மகாபாரத்த்தை தனக்காக மட்டுமே படமாக்க விரும்புவதாக தெரிவித்தார்.


இதற்கு முன்னதாக ராஜமெளலியிடம் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹேந்திரா ஒருமுறை சிந்து சமவெளி நாகரித்தை வைத்து படம் ஒன்றை எடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்.இந்த எண்ணம் தன்க்கும் இருந்ததாகவும் ஆனால் மொஹஞ்சே தாரோ சென்று பார்ப்பதற்கு தனக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்று தெரிவித்தார் ராஜமெளலி.இதுவரை ஒரு படம் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பாகங்கள் மட்டுமே தமிழில் வெளிவந்து நாம் பார்த்திருக்கிறோம். ஹாலிவுட் திரைப்படங்கள் 7 முதல் 8 பாகங்கள் வரை எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் ராஜமெளலியின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடையும் பெரும் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது.