கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படமான சலாரின் ரிலீஸ் தேதியை இன்று அறிவித்தனர். சில நாட்களுக்கு முன் 
ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஹொம்பாலே ஃபிலிம்ஸ் அன்று பதிவிட்டதை அடுத்து இன்று 12:58 மணிக்கு டாலிவுட் நடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் அடுத்த வருடம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு  கிடைத்தது.


டீசர் வெளியாகும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இன்று ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக ஆர் ஆர் ஆர் படத்தில் அத்தர் கதாப்பாத்திரத்தில் நடித்த ஜூனியர் என் டி ஆர்-ஐ  வைத்து அடுத்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார் என தகவல் வந்தது.






அதனையடுத்து NTR31 படத்தின் படப்பிடிப்பை 2023 ஆம் ஆண்டு துவங்கவுள்ளார் என்று பான் இந்திய இயக்குநர் தெரிவித்துள்ளார். “இப்போது, நடிகர் பிரபாஸை வைத்து  சலார் படத்தை இயக்கி வருகிறேன். எனது அடுத்த படத்தை ஜூனியர் என் டி ஆர் உடன் அடுத்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்குவேன்”என்று பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.


கேஜிஎஃப் வின் அசாத்திய வெற்றிக்கு பின் ரசிகர்கள் பலர் இயக்குநர் பிரசாந்த் நீல் இடமிருந்து பெரிதாக எதிர்ப்பார்கின்றனர். கேஜிஎஃப் டைரக்டர், அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹீரோக்களை வைத்து படம் இயக்கவுள்ளார்.






எல்லோரின் எதிர்ப்பார்ப்பும், சலார் படம் மீது உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸ் துப்பாக்கியுடனும் கைகளில் கத்தியை ஏந்திக்கொண்டும் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். அவரை சுற்றி பலர் மடிந்து வீழ்ந்துள்ளனர். இன்று வெளியான சலார் போஸ்டர் சில வருடங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎஃப்பின் போஸ்டர் நினைவை கொண்டுவருகிறது.