இன்று இதே நாளில் உருவான இசைப்புயல்... நிற்காமல் சுழன்றடிக்கும் சூறாவளி ஏ.ஆர்.ரஹ்மான்!

70 களில் துவங்கிய இசைஞானின் கானம் நீங்காமல் ரசிகர்களின் மனதில் ஓங்கி இருக்க, 90 களின் முன் பகுதியில்  வித்தியாசமான இசையுடன் என்ட்ரி கொடுத்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

Continues below advertisement

மணி ரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” படம்  1992 ஆம் ஆண்டு  வெளியானது. அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் வெளியான இப்படத்தில்தான் ஏ.ஆர்.ரகுமான் எனும் இசை சகாப்தம் இந்திய சினிமாவிற்கு கிடைத்தது. இன்றுடன் ஏ.ஆர்.ரகுமான் தன் இசை வாழ்கையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாக தனது 31 ஆம் ஆண்டின் சினிமா வாழ்க்கையை அடியெடுத்து வைக்கிறார்.

Continues below advertisement

70 களில் துவங்கிய இசைஞானியின் கானம் நீங்காமல் ரசிகர்களின் மனதில் ஓங்கி இருக்க, 90 களின் முன் பகுதியில்  வித்தியாசமான இசையுடன் என்ட்ரி கொடுத்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

இவர் இசையமைத்த ரோஜா பாடல்கள் அனைத்துமே செம ஹிட்டானது. இப்பாடல்கள் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. இதற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, தமிழ் நாட்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில விருது மற்றும் ஃபிலிம் ஃபேர் விருது ஆகிய அனைத்தையும் பெற்று தனது முதல் படத்திலேயே புகழின் சொந்தக்காரர் ஆனார் ஏ.ஆர்.ரகுமான்.

அங்கு தொடங்கிய  இசைப்பயணம், இன்று வரை தழைத்தோங்கி உள்ளது.பெரும்பாலும் சில இசையமைப்பாளர்களின் ஒரு சில பாடல்கள்தான் கேட்க நன்றாக இருக்கும் மீதம் உள்ள பாடல்கள் எல்லாம்  சுமாராக இருக்கும். ஆனால் இசையின் மகன் ஏ.ஆர்.ஆரின் பாடல்கள் எல்லாம் ஹிட்தான், விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அவரின் பாடல்கள் ப்ளாப் ஆகியிருக்கும்.
அதிலும் சில பாடல்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறவில்லையென்றாலும் மக்களிடையே அண்டர் ரேட்டட் பாடல்களாகவே ஒலித்து கொண்டு இருக்கிறது.

ஒரு பாடலை கேட்ட உடனே, மீண்டும் மீண்டும் கேட்க செய்யும் இசைப்புயலின் மந்திரம் இன்னும் வசப்படவில்லை. இவரின் இசைக்கும் குரலுக்கும் கோடி கணக்கில் ரசிகர்கள் உண்டு ஆனால் சிலர் இவர் பாடும் பாடல்கள் ஒரே மாதிரியாக உள்ளதாக பலர் கூறுவதும் உண்டு. சிம்புவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் வெந்து தனிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் மறக்குமா நெஞ்சம் ரிலீஸானது என்பது குறிப்பிடதக்கது. ரோஜாவில் தொடங்கி வெந்து தணிந்தது காடு வரை பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஏ.ஆர்.ஆர்., எனும் இசைப்புயல், இன்னும் பல காற்றழுத்த தாழ்வு நிலைகளை கடந்தும் இசை மழை கொட்டட்டும்!. 

Continues below advertisement
Sponsored Links by Taboola