இந்திய சினிமாவில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு ரஜினியும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதனிடையே, மத்திய அரசு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தது அரசியல் நோக்கத்திற்காகவே என சிலர் விமர்சித்தனர். ஒரு சிலர் ரஜினியை கிண்டலடித்தும் விமர்சனம் செய்திருந்தனர்.

ரஜினி அவர்கள்
அரசியலுக்கு வருவதாக சொன்னபோது எதிர்ப்புகள் இருந்தன!
இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை அறிவித்து விட்டார்!
அவருக்கு விருது கிடைத்ததற்கு இங்கே பலர் கிண்டலடித்து விமர்சனம் செய்ததை பார்க்கும்போது கேவலமான பிறவிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நன்றாக தெரிகிறது! pic.twitter.com/D4jZOIMGNt
— PERARASU ARASU (@ARASUPERARASU) April 2, 2021

இந்நிலையில், ரஜினியை விமர்சனம் செய்தவர்களுக்கு இயக்குநர் பேரரசு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ‘ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னபோது எதிர்ப்புகள் இருந்தன. இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என அறிவித்து விட்டார். அவருக்கு விருது கிடைத்ததற்கு இங்கே பலர் கிண்டலடித்து விமர்சனம் செய்ததை பார்க்கும்போது, கேவலமான பிறவிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நன்றாக தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.