டீன்ஸ்


இரவின் நிழலில் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆர் பார்த்திபன் இயக்கியுள்ள படம் டீன்ஸ். பயாஸ்கோப் மற்றும் அகிரா ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது . டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பி.கிருத்திகா ஐயர், கே.எஸ்.தீபன், சில்வென்ஸ்டன், உதய்பிரியன், பிரஷிதா, ரோஷன், அஸ்மிதா மகாதேவன்மோர், ரஞ்சித் தண்டபாணி, பார்த்திபன் ராதாகிருஷ்ணன், பிஞ்சி சீனிவாசன், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பதின் வயதினரை மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் டீசர் பரவலான கவனத்தைப் பெற்றது.


பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரவின் நிழலில் படம் முழுக்க முழுக்க சிங்கில் ஷாட்டில் எடுக்கப் பட்டு விமர்சன ரீதியாக கவனம் பெற்றது. தற்போது இளைஞர்களை மையமாக வைத்து நகரும் டீன்ஸ் படம் புதுமையான ஒரு அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 


இந்தியன் 2 படத்துடன் மோதும் டீன்ஸ்




டீன்ஸ் படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதே நாளில் தான் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது. பான் இந்திய அளவில் வெளியாகும் இந்தியன் படத்துடன் டீன்ஸ் படம் வெளியாக இருப்பது குறித்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின் சில நேரம் கழித்து அந்த பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பார்த்திபன் வேதனை:


தனது பதிவில் பார்த்திபன் “ ← நண்பர்களே! இத்திரையுலகில் எல்லோருக்கும் நான் நண்பன் ஆனால், எனக்கு நீங்களே! இந்திய அளவிலான ஒரு பிரமாண்ட படத்துடன் நம் TEENZ! 12/07/2024 அன்று முதல்... முதல் காட்சியிலேயே குடும்பம்/குழந்தைகளுடன் பாருங்கள்,சிறப்பாய் இருந்தால் ஊருக்குச் சொல்லுங்கள்- சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே களத்தில் நிற்கிறேன்! நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை reservation
தொடங்கிய உடனேயேக் காட்டுங்கள்.நானே கமல் சாரின் தீவிர ரசிகன் தான்.INDIAN -2-வை இருமுறை பார்த்து விட்டாவது நம் TEENZ-ஐ கண்டு கொள்ளுங்கள்.


TEENZ அனைவரும் INDIAN-ஐ பார்த்து பாராட்டி மகிழ வேண்டும்.அதே போல INDIANs அனைவரும் TEENZ-ஐ...!உளப்பூர்வமார இவ்வேண்டுகோளை மீறிய விளம்பரம் நானென்ன செய்திட முடியும்? இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கு முதலில் share செய்யுங்கள் please! பின் குறிப்பு: OTT - சாட்டிலைட் விற்பதில் நான் விருப்பம் காட்டவில்லை(உண்மையில் யாரும் வாங்க விருப்பம் காட்டவில்லை - நேற்றுவரை)இனி கேட்டாலும் கொடுப்பதில்லை-வெளியாகி வெற்றியாகும் வரை. காரணம், திரையரங்கில் TEENZ - ஐ நீங்கள் கண்டுகளிப்பது ஒரே ஆப்ஷனாகனாக இருக்க வேண்டுமென்பதே.....வெண்திரையாக...
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்