தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன.
இரவின் நிழல் படம் பார்த்த பல சினிமா பிரபலங்கள் இயக்குநர் பார்த்திபனின் இந்த “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கப்போல் படம் பார்த்து வித்தியாசமான முறையில் கருத்து சொல்லும் தமிழ் டாக்கீஸ் புளூசட்டை மாறன் ‘ இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டார். அதில், “இந்த படம் எடுக்குறதுக்கு முன்னாடி இயக்குநர் பார்த்திபன் உலகத்திலேயே முதல் முறையா நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் பண்ண போறேனு அறிவிச்சாரு. இது உலகில் முதல் நான் லீனியர் படம் கிடையாது. 2013 ம் ஆண்டு ஈரான் நாட்டுல ‘Fish and Cat' ன்னு ஒரு படம் வந்துச்சு. அது இத விட பெரிய படம். 2 மணி நேரம் 20 நிமிஷம் ஓடும். இந்த Fish and Cat தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம்” என்று தெரிவித்தார்.
இவ்வாறு புளூசட்டை மாறன் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி கடும் விமர்சனங்களை கிளப்பியது.
இந்த நிலையில், தமிழ் டாக்கீஸ் புளூசட்டை மாறன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இரவின் நிழல் திரைப்படத்தில் இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில்,”Continue-என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதையே!” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இயக்குநர் பார்த்திபனின் பதிவும் இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்